மகனின் திருமணம் முதல் வரவேற்பு ஆகும் செலவு
பொதுவாக வீட்டில் சுப நிகழ்ச்சி என்றால் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். என்ன தான் சுப நிகழ்ச்சி என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் செலவு என்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க போகிறது என்றால் அதற்கு கணக்கு வைத்து தான் செலவு செய்வார்கள். சில பேர் எந்த கணக்கு வைக்காமால் தாறுமாறாக செலவு செய்வார்கள். அப்படி நீங்கள் செலவு செய்யும் போது எதற்காக பணம் அதிகமாக செலவு செய்தோம் என்றே தெரியாது. அந்த வகையில் கல்யாணம் என்றால் சொல்லவா வேணும். நம் முன்னோர்கள் கூறுவார்கள் திருமணத்தை கட்டி பார், வீட்டை கட்டி பார் என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த பதிவில் மகனுக்கு திருமணம் செய்யும் போகிறீர்கள் என்றால் அதற்கான செலவு எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
மகனின் திருமணத்திற்கு எவ்வளவு செலவாகும்:
திருமணம் என்பது இரு வீட்டார் கலந்து எடுக்கும் முடிவாகும். இதில் இரு நபர்களும் கல்யாண செலவை பகிர்ந்து கொள்ளலாம். இல்லையென்றால் ஒருவரே கல்யாண செலவை ஏற்று கொள்ளலாம். அதனால் இன்றைய பதிவில் மகனுக்கு திருமணம் செய்ய எவ்வளவு செலவாகும்.
- கேட்டரிங் செலவு
- ஆடை செலவு
- பவுன் செலவு
- போட்டோ செலவு
- பத்திரிக்கை அடிப்பதற்கான செலவு
கேட்டரிங் செலவு:
கல்யாணத்தில் சாப்பாடு தான் ரொம்ப முக்கியமானது. நீங்கள் 500 நபருக்கு சொல்லி திருமணம் செய்ய போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். 500 பேர் என்றால் 750 பேர் சாப்பிடலாம்.
கல்யாணம் முதல் நாள் இரவு உணவு, கல்யாணம் அன்று காலை, மதியம் உணவு போட வேண்டியிருக்கும். இதற்கு மூன்று வேலைக்கும் 1 லட்சம் தேவைப்படும்.
ஆடை செலவு:
மணமகளுக்கு பரிசம் புடவை, திருமண புடைவை எடுக்க வேண்டியிருக்கும். இவை இரண்டிற்கும் 50,000 ரூபாய் தேவைப்படும். இந்த ஆடையை எடுப்பது அவர்களின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு மாறுபடும்.
அதுமட்டுமில்லாமல் உறவினர்களுக்கு ஆடை மற்றும் சம்மந்தி புடவை போன்றவைகளுக்கு 5000 ரூபாய் தேவைப்படும்.
100 பேருக்கு சொல்லி ஒரு பெண்ணின் வளைகாப்பு நடத்தனும்னா எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா..?
பவுன் செலவு:
பவுன் என்று பார்த்தால் மாங்கல்யம், மெட்டி வாங்க வாங்கவேண்டியிருக்கும். மாங்கல்யம் அவரின் விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு மாறுபடும். அதனால் தோராயமாக 1/2 பவுன் மாங்கல்யம், மெட்டி இரண்டும் வாங்குவதற்கான செலவு 30,000 ரூபாய் தேவைப்படும்.
போட்டோ செலவு:
போட்டோ எடுப்பதற்கு 40,000 ரூபாய் செலவாகும்.
பத்திரிக்கை அடிப்பதற்கான செலவு:
500 பேருக்கு பத்திரிக்கை அடிப்பதற்கான செலவு 5000 ரூபாய் தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் பிரண்ட்ஸுக்கு கொடுப்பதற்காக பத்திரிக்கை செலவு 2000 ரூபாய் தேவைப்படும். ஆக மொத்த செலவு 7000 ரூபாய் தேவைப்படும்.
மண்டபம் செலவு:
நீங்கள் செலக்ட் செய்யும் மண்டபத்தை பொறுத்து வாடகை மாறுபடும். குறைந்தபட்சம் 35,000 ரூபாய் தேவைப்படும்.
மாலை, பூ செலவு:
மாலை மற்றும் பூ வாங்குவதற்கு 3000 ரூபாய் தேவைப்படலாம்.
ஐயர் மற்றும் மேளம் செலவு:
ஐயர் மற்றும் மேளம் இரண்டிற்கு சேர்த்து 10,000 ரூபாய் செலவாகும்.
வரவேற்பு செலவு:
வரவேற்பிற்கு உணவு செலவு மட்டும் தான் இருக்கும். தோராயமாக 200 பேர் வருவார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு வேலை மட்டும் உணவு கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கு 20,000 ரூபாய் செலவாகும்.
மகனின் திருமணத்திற்காக மொத்த செலவாக லட்சம் தேவைப்படும். இவை தோராயமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதை விட கூடவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம்.
350 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |