1000 பேருக்கு சொல்லி பெண்ணிற்கு திருமணம் செய்யணும்னா எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Marriage Cost in Tamil

பொதுவாக ஒரு குடும்பத்தில் சிறியதாக ஒரு விசேஷம் செய்தாலே நமக்கு திட்டமிட்டு செய்வது என்பது மிக மிக கடினமாக இருக்கும். இப்படி இருக்கையில் இருமணங்களும் இரு குடும்பங்களும் இணையும் ஒரு தருணம் என்றால் அது திருமணம் தான். இப்படிப்பட்ட பல சிறப்புடைய தங்களது குழந்தைகளின் திருமணத்தை ஒவ்வொரு பெற்றோரும் ஒரு திருவிழா போல செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அப்படி நாம் நமது குடும்பத்தில் நடக்கும் திருமணத்தை திருவிழா போல வெகு விமர்சையாக செய்ய வேண்டும் என்றால் அதற்கு நாம் சரியாக திட்டமிட வேண்டும். எனவே தான் இன்றைய 1000 பேருக்கு சொல்லி பெண்ணிற்கு திருமணம் செய்யணும்னா எவ்வளவு செலவாகும் என்பதை பார்க்கலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Marriage Cost in India in Tamil:

Marriage Cost in India in Tamil

ஒரு பெண்ணிற்கோ அல்லது ஒரு ஆணிற்கோ திருமணம் என்பது தங்களுது வாழ்க்கையில் மிக மிக மகிழ்ச்சியான தருணம் ஆகும்.

அதேபோல் ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணிற்கோ அல்லது ஒரு ஆணிற்கோ திருமணம் நிச்சயம் செய்திருக்கின்றார்கள் என்றால் அவர்களை காட்டிலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் அதிக பொறுப்புகள் இருக்கும்.

அதாவது ஒரு திருமணத்தை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகவும் எப்படி செய்வது என்பதை எல்லாம் பற்றி தான் முதலில் சிந்தனை செய்வார்கள். அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் 1000 பேருக்கு சொல்லி பெண்ணிற்கு திருமணம் செய்யணும்னா எவ்வளவு செலவாகும் என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.

திருமணத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. திருமண இடம்
  2. திருமண அலங்காரம்
  3. திருமண உணவு/கேட்டரிங்
  4. மணமகன் மற்றும் மணமகனுக்கான திருமண உடை
  5. திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல்
  6. திருமண அழைப்பிதழ்கள்
  7. தங்குமிடம்
  8. போக்குவரத்து
  9. திருமண பரிசு
  10. இதர செலவுகள்

100 பேருக்கு சொல்லி ஒரு பெண்ணின் வளைகாப்பு நடத்தனும்னா எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா

திருமண இடம்:

திருமண இடம் என்பது திருமணத்திற்கு நீங்கள் எவ்வளவு விருந்தினர்களை அழைக்க இருக்கின்றிர்கள் அல்லது நீங்கள் செய்யப்போகும் திருமண முறையை பொறுத்தே அமையும்.

இப்பொழுது நீங்கள் தோராயமாக 1000 பேருக்கு சொல்லி திருமணம் செய்யபோகின்றிர்கள் என்றால் இரண்டு அடுக்குடன் கூடிய திருமண மஹால் தேவைப்படும்.

அதற்கு உங்களுக்கு தோராயமாக 1,00,000 முதல் 3,00,000 வரை செலவாகும்.

திருமண அலங்காரம்:

மிக முக்கியமான திருமண செலவுகளில் ஒன்று தான் திருமண அலங்காரம். அதாவது பொதுவாக மலர்கள் மற்றும் பிற அலங்காரப் பொருட்களுடன் எளிமையான மற்றும் நேர்த்தியான அலங்காரத்தை தான் அனைவரும் விரும்புவார்கள்.

இதற்கான செலவு நீங்கள் திருமணத்திற்கு தேர்வு செய்துள்ள இடத்தை பொறுத்து மாறுபடும். இதற்கு உங்களுக்கு தோராயமாக 50,000 முதல் 1,00,000 வரை செலவாகும்.

திருமண உணவு/கேட்டரிங்:

கேட்டரிங் செலவு முக்கியமாக உங்கள் திருமணத்திற்கு நீங்கள் பணியமர்த்தப் போகிற கேட்டரிங் பொறுத்தது. பொதுவாக இந்தியாவில் திருமணத்திற்கு வருகின்ற விருந்தினர்கள் திருமணத்தின் அலங்காரத்தை கூட மறந்துவிடுவார்கள் .

ஆனால் திருமணத்தின் உணவினை மட்டும் மறக்கவே மாட்டார்கள். இதற்கான செலவு நீங்கள் அளிக்கப்போகும் உணவு மற்றும் விருந்தினர்களின் எண்ணீக்கையை பொறுத்து மாறுபடும்.

அதாவது நீங்கள் சைவ உணவு அளிக்கப்போகின்றார்கள் என்றால் தோராயமாக 1 சாப்பாட்டின் விலை 600 ரூபாய், இதுவே நீங்கள் அசைவ சாப்பிடு அளிக்கப்போகின்றார்கள் என்றால் தோராயமாக 1 சாப்பாட்டின் விலை 1000 ரூபாய் ஆகும்.

இதற்கு உங்களுக்கு தோராயமாக 6,00,000 முதல் 10,00,000 வரை செலவாகும்.

3 பெட்ரூமுடன் கூடிய வீடு கட்டுவதற்கு செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா

மணமகள் மற்றும் மணமகன்கனுக்கான திருமண உடைகள்:

பொதுவாக ஒரு பெண்ணிற்கு திருமணம் என்றால் அவள்தான் அங்கு உள்ள அனைவரிலும் தனித்துவமாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அவர்கள் தங்கள் உடை மற்றும் அலங்காரத்திற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி தேர்வு சேர்வார்கள்.

இந்தியாவில் திருமணத்தில் பெண்கள் பொதுவாக லெஹெங்கா அல்லது புடவைகளை அணிவார்கள், அதன் விலை தோராயமாக 25,000 முதல் 1,00,000 வரை உள்ளது. இதனை தவிர்த்து அவர்களின் மெஹந்தி, சிகை அலங்காரம் மற்றும் மேக்கப் ஆகியவற்றிற்கு ஒரு மேக்கப் நிபுணரை தேர்வு செய்வார்கள்.

அவர்களுக்கு தோராயமாக 25,000 ரூபாய் வரை செலவாகும். அதேபோல் திருமண பெண்ணிற்கு தங்க நகை வாங்கி தருவது வழக்கம் உள்ளது. அதற்கான செலவு நீங்கள் வாங்கும் தங்க நகையின் அளவை பொறுத்து மாறுபடும். இதற்கு தோராயமாக 5,00,000 ரூபாய் வரை செலவாகும்.

இதுவே மணமகன்கள் திருமணத்தில் ஷெர்வானி அல்லது பட்டு வெட்டி சட்டை அணிவார்கள். அதற்கு தோராயமாக 35,000 முதல் 75,000 வரை செலவாகும்.

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல்:

பொதுவாக திருமணத்தின் நினைவுகளை நமக்கு நாம் நினைத்த நேரத்தில் திருப்பி அளிப்பதற்கு உதவுவது திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான். இதற்கு ஆகும் செலவானது நீங்கள் தெரிவு செய்யும் திருமண புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராஃபரின் நிலையைப் பொறுத்து மாறுபடும்.

அதாவது ஒரு நல்ல புகைப்படக் கலைஞருக்கு ஒரு நாளைக்கு சுமார் 40,000 ரூபாய் செலவாகும், மேலும் ஒரு வீடியோகிராஃபருக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 ரூபாய் செலவாகும்.

1,300 சதுர அடியில் 3 Bedroom-டன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா

திருமண அழைப்பிதழ்கள்:

இதுவும் திருமணத்தின் மிகவும் முக்கியமான ஒரு அங்கம் ஆகும். இதற்கான செலவு நீங்கள் தேர்வு செய்யும் அழைப்பிதழின் மாடலை பொறுத்து மாறுபடும். திருமண அழைப்பிதழ் ஒரு கார்டுக்கு தோராயமாக 50 முதல் 100 ரூபாய் வரை செலவாகும்.

அப்படியென்றால் 1000 கார்டுக்கு 50,000 முதல் 1,00,000 வரை செலவாகும்.

தங்குமிடம்:

நீங்கள் அளித்துள்ள விருந்தினர்களை பொறுத்து தங்குமிடத்தின் செலவு நிர்ணயிக்கப்படுகிறது. தோராயமாக இதற்கு 50,000 வரை செலவாகலாம்.

போக்குவரத்து:

உங்கள் திருமண இடம் வெகு தொலைவில் இருந்தால், நீங்கள் போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் . மேலும், உங்கள் வெளியூர் விருந்தினர்களின் போக்குவரத்துக்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்கு உங்களுக்கு தோராயமாக 20,000 முதல் 1,00,000 ரூபாய் வரை செலவாகும்.

திருமண பரிசு:

திருமணம் முடிந்தவுடன் திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்கு பரிசு அளிப்பது வழக்கம். அதற்கான செலவு நீங்கள் அளிக்க போகும் பரிசினை பொறுத்து மாறுபடும்.

இதர செலவுகள்:

மேலே கூறியவற்றை தவிர திருமணத்தில் வேறுசில இதர செலவுகளும் ஏற்படும். அதற்கென்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

மேலே கூறியுள்ள செலவுகளில் நீங்கள் தேர்வு செய்யும் பொருள் இடங்களை பொறுத்து குறையவும் செய்யலாம் அதிகரிக்கலாம். அது உங்களின் பட்ஜெட்டை பொறுத்தது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement