3 பெட்ரூமுடன் கூடிய வீடு கட்டுவதற்கு செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா..?

Advertisement

950 Square Feet House Plan and Total Cost in Tamil

இன்றைய காலகட்டத்தில் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது பலரது ஆசையாகவும் கனவாகவும் உள்ளது. தங்கள்து ஆசை வீட்டினை கட்டுவதற்காக பணம் சேமித்து வைத்திருப்பவரகள் வீடு கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். இதுவே பணம் இல்லாதவர்கள் வீடு கட்ட என்னென்ன பொருட்கள் வேண்டும் அதை வாங்குவதற்கான செலவுகள் ஆகும் என்பதையெல்லாம் கணக்கு போடுவார்கள். இப்பொழுது நீங்கள் வீடு கட்ட போகின்றிர்கள் என்றால் அதற்கு இவ்வளவு இவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்தால் அதற்கேற்றபடி பணத்தை சேமித்து வைக்கலாம் அல்லவா.! அந்த வகையில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் 950 சதுர அடியில் 3 Bedroom-டன் கூடிய வீடு கட்ட எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் மற்றும் எவ்வளவு செலவாகும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

950 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு:

ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு செங்கல், சிமெண்ட், மணல்/எம்-மணல், ஜல்லி (கரடுமுரடான திரட்டுகள்), வூட்ஸ், கதவுகள், ஜன்னல், எஃகு, ஓடுகள், வர்ணங்கள், மின்சார பொருட்கள், பிளம்பிங் பொருட்கள், சுகாதார பொருட்கள், தச்சு பொருட்கள், False Ceiling Materials மற்றும் தண்ணீர் வசதி போன்றவை தேவைப்படும்.

எவ்வளவு சீமெண்ட் தேவைப்படும்:

950 sq ft house cost in india

வீடு கட்டுவதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படும் பொருட்களில் ஒன்று தான் சிமெண்ட். இப்பொழுது 950 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு சிமெண்ட் தேவைப்படும் அதற்கு எவ்வளவு செலவாகும் பார்க்கலாம்.

அதாவது 950 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 380 மூட்டை சிமெண்ட் தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 400 என்ற பட்சத்தில் 1,52,000 செலவு ஆகும்.

1,300 சதுர அடியில் 3 Bedroom-டன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா

எவ்வளவு கம்பி தேவைப்படும்:

கம்பி

இந்த கம்பிகள் தான் வீட்டிற்கு மொத்தமாக உறுதியை சேர்க்கும். ஆகவே அதனை சரியாக வாங்கிகொள்வது அவசியம். 950 சதுரடி வீட்டிற்கு எவ்வளவு கம்பிகள் தேவைப்படும் என்றால் 4.75 டன் ஆகும்.

அப்படியென்றால் தோராயமாக 1 டன் கம்பியின் விலை 75,000 ரூபாய் என்றால் 4.75 டன் கம்பியின் விலை தோராயமாக 3,56,250 ரூபாய் ஆகும்.

எவ்வளவு செங்கல் தேவைப்படும்:

செங்கல் எவ்வளவு தேவைப்படும்

500 சதுரடிக்கு 11,000 ஆயிரம் கல் தேவைப்படும் பட்சத்தில் 950 சதுரடிக்கு எவ்வளவு கல் தேவைப்படும் 20,900 கல் தேவைப்படும். ஒரு கல்லின் விலையானது 11 ரூபாய் என்றால் 20,900 கல்லின் விலை எவ்வளவு 2,29,900 ரூபாய் ஆகும்.

புதிதாக வீடு கட்டப்போகின்றிர்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

எவ்வளவு மணல் தேவைப்படும்:

950 sq ft house cost in tamil

வீடு கட்டுவதற்கு எவ்வளவு M சாண்ட் மணல் தேவைப்படும். இந்த M சாண்டின் 1 யூனிட் விலை 38,000 ஆயிரம் ஆகும். அப்படியென்றால் நமக்கு 18 யூனிட் மணல் தேவைப்படும்.

இதனுடைய விலையானது தோராயமாக 6,84,000 ரூபாய் ஆகும். ஒருவேளை நீங்கள் P சாண்ட் மணலை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனின் 1 யூனிட் விலை 5000 ரூபாய் ஆகும்.

நமக்கு தோராயமாக 5.7 யூனிட் மணல் தேவைப்படும். இதனுடைய விலையானது 28,500 ரூபாய் ஆகும்.

எவ்வளவு ஜல்லி தேவைப்படும்:

ஜல்லி

வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான ஜல்லிகள் தேவைப்படும். அதாவது 20 mm Aggregate ஜல்லி, 40 mm Aggregate ஜல்லி ஆகிய இரண்டுமே தேவைப்படும்.

20 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை 3000 ரூபாய் ஆகும். நமக்கு 9.5 யூனிட் தேவைப்படும். இதன் விலை மொத்தம் 28,500 ரூபாய் ஆகும்.

அதேபோல் 40 mm Aggregate ஜல்லியின் விலை 2800 ரூபாய் என்றால் நமக்கு தேவையான ஜல்லிகள் 3.8 யூனிட் ஆகும். அப்படி என்றால் 10,640 ரூபாய் செலவு ஆகும்.

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் தான் வீடு கட்டுவதற்கு முக்கிய தேவை. அதற்கு பிறகு வீட்டிற்கு டைல்ஸ் அதன் பின்பு கரண்ட் என நிறைய செலவுகள் இருக்கும். அது அனைத்தும் உங்களின் வீட்டின் வசதிகளை பொறுத்து மாறுபடும்.

ஆகையால் பொதுவாக வீடு கட்ட ஆரம்பித்தால் 5,00,000 முதல் 10,00,000 ரூபாய் கையில் வைத்து கொண்டு ஆரம்பிப்பது நல்லது.

350 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement