Meen Varuval Masala Seivathu Eppadi
பொதுவாக சாப்பாட்டினை பொறுத்தவரை அனைவருக்கும் எல்லா விதமான சாப்பாடுகளும் பிடிப்பது இல்லை. ஏனென்றால் சாப்பாட்டினை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு எந்த சாப்பாடாக இருந்தாலும் காரம் தூக்கலாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் மற்ற சிலர் சாப்பாட்டில் தேங்காய் இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் என்று கூறுவார்கள். இவற்றை எல்லாம் பொதுவானதாக இருந்தாலுமே கூட சமைப்பவர்களுக்கு நாம் சமைக்கும் சாப்பாடு எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் ருசித்து சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனால் வித விதமான மசாலா பொடியினை எல்லாம் சேர்ப்பார்கள். எனவே இன்று மீன் வறுவல் சுவையாகவும், உடையாமல் வர மசாலா பொடி செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
Fish Fry Masala Ingredients:
பொருட்களின் பெயர் |
பொருட்களின் அளவு |
காய்ந்த மிளகாய் |
2 கப் |
முழு மல்லி |
1 கப் |
சீரகம் |
10 கிராம் |
சோம்பு |
10 கிராம் |
மிளகு |
10 கிராம் |
வெந்தயம் |
5 கிராம் |
கடுகு |
5 கிராம் |
மஞ்சள்தூள் |
2 ஸ்பூன் |
கிராம்பு |
10 |
எண்ணெய் |
தேவையான அளவு |
மீன் வறுவல் மசாலா பொடி செய்முறை:
- முதலில் அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெயினை காய விட வேண்டும்.
- அதன் பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் முழு மல்லியினை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
- அடுத்து எடுத்து வைத்துள்ள சீரகம், கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம் மற்றும் கிராம்பு என இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.
- கடைசியாக வறுத்த பொருட்கள் அனைத்தினையும் ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் போல அரைத்தால் மீன் வறுவல் மசாலா பொடி தயார்.
- இத்தகைய மசாலா பொடியினை உங்களுடைய தேவைக்கு ஏற்றவாரு மீன் வறுக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |