Baby Shower Things List | வளைகாப்பு தேவையான பொருட்கள் | Valaikappu Things to Buy in Tamil
நமது வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சுப காரியங்களும் அசுப காரியங்களும் நடக்கிறது. சுப காரியங்கள் என்று எடுத்துக்கொண்டால், குழந்தை பிறந்து அதற்கு பெயர் வைப்பது, சடங்கு, காதுகுத்து, கல்யாணம், வளைகாப்பு என பல்வேறு சுப காரியங்கள் அடங்கும். இவ்வாறு நடக்கும் சுப சடங்குகள் அனைத்திற்கும் ஒரு சம்பிரதாயம் என்று ஒன்று இருக்கும். அந்த வகையில்சுப சடங்குகளில் ஒன்றான வளைகாப்பு செய்வதற்கு சம்பிரதாயத்தின் படி என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வளைகாப்பு என்பது, ஒரு பெண் கருவுற்ற ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அப்பெண்ணிற்கு சடங்கு செய்யும் முறை ஆகும். இந்த வளைகாப்பில் அப்பெண்ணிற்கு வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியம் அளிக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் செய்வார்கள். அதாவது, வளையல் அணிவது, சாதம் ஊட்டிவிடுதல், பொட்டு வைத்தல் என பல்வேறு முறைகள் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வளைகாப்பிற்கு என்று தனி சீர்வரிசை வைத்து அதில் வளைகாப்பிற்கு தேவையான பல்வேறு பொருட்கள் வைத்து இருப்பார்கள். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
Valaikappu Thevaiyana Porutkal:
வளைகாப்பு:
கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பற்றிய பயங்கள் அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் அக்காலத்தில் அதிக மனஅழுத்ததுடன் இருப்பார்கள். ஆகையால், அவர்களுக்கு மன அழுத்தம் நீங்கி அவர்களுக்கு மிகுந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தரும் விதமாக உறவினர்கள் அனைவரும் சேர்த்து காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் சடங்கும் ஆகும்.
இவ்விழாவில், கர்ப்பிணி பெண்ணுக்கு உறவினர்கள் அனைவரும் கண்ணாடி வளையல் போட்டு, மஞ்சள் குங்குமம் தடவி ஆசிர்வாதம் செய்வார்கள். முக்கியமாக, அப்பெண்ணுக்கு வேப்பிலை காப்பு கட்டுவார்கள். இது தாயையும் சேயையும் நோய் தொற்றுகளிலிருந்து பாதுக்காக்கிறது. அடுத்து, 7 வகையான சாதங்களை செய்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஊட்டிவிட செய்வார்கள். கடைசியாக பெண்ணிற்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள்.
கணபதி ஹோமம் செய்ய தேவையான பொருட்கள்
வளைகாப்பு செய்ய தேவையான பொருட்கள்:
- இரண்டு குத்து விளக்கு
- நறுமணம் உள்ள மலர்கள்
- பழ வகைகள்
- இனிப்பு வகைகள்
- மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம்
- கண்ணாடி
- கண்ணாடி வளையல்
- பன்னீர்
- வேப்பிலை காப்பு
- 7வகை சாதம்
7 வகையான சாதம்:
ஒவ்வொரு குடும்பத்திலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு 7,9 அல்லது 11 வகை சாதங்களை வளைகாப்பிற்கு செய்வார்கள். இருந்தாலும், பெரும்பாலான வீடுகளில் 7 வகையான சாதங்களை செய்வார்கள். அவை பின்வருமாறு:
- சர்க்கரை பொங்கல்
- புளிசாதம்
- எலுமிச்சை சாதம்
- தயிர் சாதம்
- சாம்பார் சாதம்
- தேங்காய் சாதம்
- வெஜ் சாதம்
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |