சிறந்த தத்துவங்கள்
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நாம் அனைவருமே இந்த சமுதாயத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மனிதனாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால், ஒரு சில சூழ்நிலை காரணங்களை நம்மால் அப்படி இருக்க முடியாது. மற்றவர்கள் நம்மை பார்த்து கீழ் தனமாகவும், மரியாதை இல்லாமலும் நடத்துகிறார்கள் என்றால், நாம் முதலில் முறையான மனிதனாக மாற வேண்டும். அதற்கான வழிகளை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மரியாதையை என்பது மிகவும் முக்கியம். அதனை நாம் என்றும் முறையாக கடைபிடிக்க வேண்டும். மரியாதை மட்டுமின்றி மற்றவர்கள் நம்மிடம் பேசும்முறை, அவர்கள் நம்மை பற்றி நினைக்கும் வகை அனைத்தும் நல்லதாகவே இருக்க வேண்டும். ஆகையால், நீங்கள் உங்களை ஒரு புது மனிதனாக மாற்ற விரும்பினால் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தத்துவங்களை பின்பற்றுங்கள்.
உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?
Principles to Become a New Person in Tamil:
- எப்போதும் அனைவரையும் புகழ்ந்துகொண்டே இருக்கும் நபர்களையும், உங்களை புகழ்ந்துகொண்டே இருக்கும் நபர்களையும் நம்பவே நம்பாதீர்கள்.
- உங்களுக்காக சில நேரங்களை நீங்கள் ஒதுக்கும்போதோ அல்லது உங்களுக்கான நேரம் கிடைக்கும்போதோ புத்தகங்களை படியுங்கள்.
- முதலில் நீங்கள் பேசப்போவதற்கான அர்த்தங்களைத் தெரிந்தகொண்டும் புரிந்துகொண்ட பிறகும், மற்றவர்களிடம் பேசுங்கள்.
- உங்களிடம் ஒரு பூங்காவும், ஒரு நூலகமும் இருந்தால் உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைத்துவிடும்.
- காலையில் யோசியுங்கள், மதியம் செய்லபடுங்கள், மாலை உணவருந்துங்கள், இரவு தொங்கிவிடுங்கள்.
- எல்லா கஷ்டங்களும் நீங்கள் தவறான இடத்தில இருக்கும்போதே வரும். அதனால், நீங்கள் ஒரு இடத்தில இருக்கும்போது சந்தோசமாக இல்லையென்றால் அந்த இடத்தை விட்டு விலகி விடுங்கள்.
- திட்டம் செய்து ஆபத்தில் இறங்குவதற்கு, முடியாது என்பதற்கும் சிறிய வித்தியாசம் உள்ளது.
- உங்கள் பிரச்சனைகளை உங்களுடன் இருப்பவர்களிடம் கூறினால், 80 சதவீத நபர்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள். மீதமுள்ள 20 சதவீத நபர்கள், நீங்கள் பிரச்சனையில் உள்ளீர்கள் என்பதை எண்ணி சந்தோசப்படுவார்கள்.
- இந்த தத்துவங்களை நீங்கள் புரிந்துகொண்டால் உங்களிடம் வளர்ச்சிக்கான சில மாற்றங்களை உணர்வீர்கள்.
உங்களை மரியாதைக்குரிய நபராக மாற்றுவதற்கு இதனை கடைபிடிங்க..
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |