உங்களை மரியாதைக்குரிய நபராக மாற்றுவதற்கு இதனை கடைபிடிங்க..

Advertisement

Do You Want to Be Respected 

மரியாதை என்பது மனிதரின் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற ஒன்றாக இருக்கிறது. நாம் அனைவருமே பிறரால் மதிக்கப்பட விரும்புகிறோம். இது மனிதத் தொடர்புகளின் அடிப்படையில் உருவாகிறது. இது தானாக ஒருவருக்கு வந்துவிடாது. பிறர் உங்களை மதிக்க, அத்தகைய நற்பெயர்களை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். மற்றவர்களிடம் சென்று மரியாதை கொடு என்று கேட்க முடியாது. அது அவர்களால் கொடுக்க கூடியது. அதனால் அதனை கேட்டு பெற கூடாது. இந்த மரியாதையானது நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து மற்றவர்கள் தர கூடியது. அதனால் நீங்கள் எப்படி இருந்தால் மரியாதை கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

குறைகள்:

மற்றவர்கள் பற்றி குறைகளை பேசுவதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. எல்லா மனிதர்களும் எல்லா வளமும் பெற்று சிறப்பாக இருக்க மாட்டார்கள். எல்லாரிடமும் ஒரு குறை காணப்படும். அதனை தெரிந்து   கொண்டு நிறைகளாக  மாற்ற வேண்டும். அதனை விட்டு விட்டு மற்றவர்களை பற்றி குறைகளை கூற கூடாது. மற்றவர்கள் பற்றி குறைகள் கூறாமல் ;உங்கள் வேலையை சிறப்பாக செய்தாலே உங்கள் மீது மரியாதை வரும்.

தன்னம்பிக்கை:

நீங்கள் எந்த ஒரு கஷ்டமான விஷயத்தையும் கண்டு துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் அதனை எதிர்த்து போராடுபவர்களின் மேல் மரியாதை வருகிறது. அதனால் நீங்கள் எல்லா விஷயத்தையும் தன்னபிக்கையுடன் செய்யுங்கள்.

தோல்வி :

சில பேர் என்ன தான் தோல்வி அடைந்தாலும் அதனை ஒத்து கொள்ள மாட்டார்கள். அந்த தோல்வியை ஒத்து கொள்ள முடியாமல் மற்றவர்கள் மீது அல்லது மற்ற விஷயங்களினால் தான் தோல்வி ஆகிவிட்டது என்று கூறுவார்கள். நீங்கள் செய்த தவறை ஒத்து கொண்டாலே மற்றவர்கள் மதிப்பார்கள்.

உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?

உண்மை:

மற்றவர்களிடம் இதை செய்வேன், அதை செய்வேன் என்று கூறுவார்கள். அதனை ;செயல்படுத்த மாட்டார்கள். இப்படி இருந்தால் அவர் சொல்வதொடு சரி செயல்படுத்த மாட்டார்கள். அதுவே நீங்கள் சொல்லும் வார்த்தைகளை செயல்படுத்தி காட்டினால் உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும்.

வெளிப்படை தன்மை:

சில பேருக்கும் இரண்டு முகங்கள் இருக்கும் அதாவது மனதில் ஒரு மாதிரியாகவும்,வெளியில் ஒரு மாதிரியாகவும் நடிப்பார்கள். இப்படி இருந்தால் எப்படி மரியாதை வரும். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை வெளிப்படையாக பேசுவிடுங்கள். மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசாதீர்கள்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement