Multipurpose of Rice in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் Multipurpose பகுதியில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவரும் சாப்பிடும் அரிசி என்னென்ன வகைகளில் நமக்கு பயன்படுகிறது என்பதை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம். அரிசி என்பது சமைத்து சாப்பிட மட்டும் தான் என்று அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அரிசி சமையலுக்கு மட்டுமில்லாமல் பல வகைகளில் நமக்கு பயன்படுகிறது என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. எனவே நீங்கள் அனைவரும் அரிசியின் பல்வேறு பயன்களை தெரிந்து கொள்ளும் வகையில் அரிசியின் பல்வேறு பயன்பாடுகளை இப்பதிவில் விவரித்துள்ளோம்.
அரிசியின் பல்வேறு பயன்பாடுகள்:
அரிசி:
அரிசி தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. இது ஈர நிலங்களில் வளரக்கூடியது. இந்த நெற்பயிர் 5 மாத கால அளவில் வளரக்கூடிய தாவரமாகும்.
வேர்க்கடலையை சாப்பிட்டால் மட்டும் போதாது இது கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..! |
பாரம்பரிய அரிசி வகைகள்:
- மாப்பிளை சம்பா
- ராஜயோகம்
- கருப்பு கவுனி
- குடவாழை
- துளசிவாஸ சீரகச்சம்பா
- வாடன் சம்பா
- கைவரசம்பா
- கண்டசாலி
- தேங்காய்ப்பூ சம்பா
- கொட்டார சம்பா
- செம்பாளை
- சம்பா மோசனம்
- ராஜ மன்னார்
- பவானி
- பூங்கார்
- சிங்கினிகார்
- வாலான்
சமையலுக்கு அரிசி:
அரிசி இல்லாமல் சமையல் இல்லை. எனவே சமையலுக்கு அரிசி மிகவும் அவசியமான ஒன்று. அரிசியில் பலவகையான உணவுகளை சமைக்கலாம். அரிசி சாதமாக செய்து சாப்பிடுவதன் மூலம் உடலின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
சரும பொலிவிற்கு அரிசி:
அரிசியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் முகம் பொலிவாகவும் இளமையாகவும் இருக்கும்.
தலைமுடி வளர்ச்சிக்கு அரிசி தண்ணீர்:
அரிசி கழுவிய தண்ணீரை 1/2 மணி நேரம் புளிக்கவைத்து பிறகு உங்கள் முடிக்கு அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து தலை அலசினால் முடி மென்மையாகவும் வலிமையாகவும் மற்றும் நீளமாகவும் வளரும்.
குழந்தைகளுக்கு அரிசி:
ஒரு வாணலில் 1 கப் அரிசி, 1/4 கப் வேர்க்கடலை, 4 பாதாம், 4 பிஸ்தா மற்றும் 4 முந்திரி போன்றவைகளை அரைத்து பவுடராக எடுத்து கொள்ளுங்கள்.
இந்த அரிசி பவுடரை தேவைப்படும் போது, தண்ணீரில் கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு கஞ்சியாக கொடுக்கலாம். இதனை 6 மாத குழந்தைக்கு கொடுக்கும் போது குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.
இந்த கஞ்சி பக்கவிளைவுகள் இல்லாமல் இருந்தாலும் நட்ஸ் வகைகள் சேர்த்து இருப்பதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதனை கவனித்த பிறகு கொடுக்க வேண்டும்.
உப்பில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இது தெரியாம சமையலுக்கு பயன்படுத்தாதீர்கள்.. |
ஆரோக்கியமான உடலுக்கு அரிசி:
ஆரோக்கியமான உடலுக்கு கைக்குத்தல் அரிசி மிகவும் நல்லது. ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. கடைகளில் விற்கும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியையே அனைவரும் விரும்புகின்றனர்.
கைக்குத்தல் அரிசி, எளிதில் ஜீரணமடையும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை நீக்குதல், இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் வாதம், பித்தம், கபத்தை சீராக வைத்திருக்கும்.
திருமணத்தில் அரிசி அட்சதை:
அரிசியும் மஞ்சளும் கலந்து தான் அட்சதை. திருமணத்தில் மணமக்கள் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெறவும், தீயசக்தியில் இருந்து பாதுக்காத்து வளமான வாழ்க்கையை வாழவும் அரிசி அட்சதை தூவப்படுகிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு அரிசி பயன்கள் பற்றி தெரியுமா? |
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |