வேர்க்கடலையை சாப்பிட்டால் மட்டும் போதாது இது கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..!

Advertisement

Peanut Multipurpose in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. இன்றைய பதிவில் வேர்க்கடலையின் பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

வேர்க்கடலையில் அப்படி என்ன பல வகையான நன்மைகள் உள்ளது என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின்  மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இத்தனை நாளா வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தியும் இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே

வேர்க்கடலையின் பல்வேறு பயன்கள்:

 Peanut health benefits in tamil

சமையலில் வேர்க்கடலை:

பொதுவாக வேர்க்கடலை என்றாலே நாம் அனைவரின் மனதிலேயும் முதலில் நினைவிற்கு வருவது அதன் சமையல் பயன்பாடு மட்டும் தான். இந்திய பாரம்பரிய சமையல்கள் முதல் மேலை நாட்டு சமையல்களிலும் இந்த  வேர்கடலையினால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக இதனை பயன்படுத்தி சட்னி, பல வகையான கலவை சாப்பாடுகளுக்கு தாளிப்பிற்கு பயன்படுத்துவார்கள். மேலும் இதிலிருந்து தயாரிக்கப்படும் Peanut Butter பலருக்கும் விருப்பமான உணவு பொருளாக உள்ளது.

ஆரோக்கியத்தில் வேர்க்கடலை:

பொதுவாக இதனை உணவில் எடுத்து கொள்வதன் இரகசியமே இதில் உள்ள பல வகையான ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கின்றது.

அதாவது இதில் உள்ள மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். மேலும் இதில் வைட்டமின்கள் ஈ, பி1, பி3,பி9,மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே இஞ்சியை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

இவை அனைத்துமே நமது உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும் சத்துக்கள் ஆகும். அதனால் ஒருவர் தினமும் வேர்க்கடலையை சாப்பிடுபவதால் அவருக்கு கீழ்கண்ட பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அதாவது ஒருவர் தினமும் வேர்க்கடலையை சாப்பிடுபவதால் அவரின் இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் உடல் எடையை குறையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கலாம் இது போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

அழகை மேம்படுத்துவதில் வேர்க்கடலை:

வேர்க்கடலையில் உள்ள பல ஆக்ஸிஜனேற்றங்களால் உங்களுக்கு முதுமை தோற்றம் வருவதை தடுக்கின்றது. மேலும் ஒருவர் தினமும் சரியான அளவில் வேர்க்கடலையை எடுத்து கொள்வதன் மூலம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் ஈ ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். அதனால் இது சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்களினால் சருமத்திற்கு ஏற்படும் தீமைகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

வேர்க்கடலையில் உள்ள அதிக அளவு வைட்டமின் கே மற்றும் கொழுப்பு அமிலங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்க உதவுகின்றன.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வெற்றிலை செடியை வளர்க்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 
Advertisement