சிற்பி திட்டம் என்றால் என்ன? விளக்கம்!

Advertisement

சிற்பி திட்டம் | Sirpi Thittam in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்காக தொடங்கபட்ட சிற்பி திட்டம் பற்றிய தொகுப்பை பார்க்கலாம். நாளைய எதிர்காலம் பள்ளி மாணவர்களின் கையில் தான் உள்ளது, அதனால் மாணவர்களை சிறுவயதில் இருந்தே நல்ல வழிக்கு கொண்டு வருவது பெற்றோர்களின் கடமை மட்டுமல்ல அனைவருடைய கடமையாகும். இதனால் முதல்வர் சிறார் குற்றங்களுக்கு தீர்வு காண ‘சிற்பி’ திட்டம் எனும் முறையை இன்று (14.09.2022) தொடங்கி வைத்துள்ளார். வாங்க இன்னும் சிற்பி திட்டம் பற்றிய விளக்கங்களை படித்தறியலாம்.

சிற்பி திட்டத்தின் நோக்கம்:

  • அதிகமான குற்றசெயல்கள் சென்னையில் நடந்து வருகிறது, அதனை தடுப்பதற்காக காவல்துறை சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை தொடங்க கடந்தாண்டு முடிவெடுத்தது.
  • இந்த திட்டத்தின் மூலம் சிறுவர்களின் குற்றசெயல்களுக்கு தீர்வு எடுக்கவும், பாதிக்கப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு நல் வழிகாட்டுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் 50 மாணவர்களை கொண்டு இந்த திட்டத்தை தொடங்கப்பட்டது.

மாணவர்களை நல்வழிபடுத்துதல்:

  • பள்ளிகளில் தேசிய மாணவர் படை (என்சிசி) உள்ளதை போல 8-ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட உள்ளது.
  • சிற்பி திட்டத்தின் மூலம் மாணவர்களை சுற்றுலா, புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அவர்களை சமுதாயத்தில் பொறுப்புள்ளவராக மாற்றுதல், மற்றும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் அடங்கும்.

விழிப்புணர்வு:

  • sirpi thittam in tamil: காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசர கால எண்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு தெரியபடுத்துவார்கள், அது மட்டுமல்லாமல் அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்வார்கள்.

முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின்:

  • போதை பொருள்களை தடுப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்களின் தகவல்களை பெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தை  14.09.2022 இன்று முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது.
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News
Advertisement