சூரிய கிரகணம் 2022 எப்போது தெரியுமா?

Suriya Kiraganam 2022 in Tamil

2022-ஆம் ஆண்டில் வரும் முதல் சூரிய கிரகணம் என்று தெரியுமா? | Suriya Kiraganam 2022 in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் 2022-ஆம் ஆண்டில் வரும் முதல் சூரிய கிரகணம் எப்போது வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பொதுவா சூரிய கிரகணம் ஏன் நடக்குதுன்னு ஒரு கேள்வி இருக்கு. கிரகணங்கள் பற்றி நிறைய நம்பிக்கைகள், புராண கதைகள் இருந்தாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம்.

சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும். சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும்.

இத்தகைய கிரகணம் வருடம் வருடம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் இந்த 2022-ஆம் ஆண்டில் வரும் முதல் சூரிய கிரகணம் என்று வருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

சூரிய கிரகணம் 2022 எப்போது – Suriya Kiraganam 2022 Date and Time:

இந்த 2022-ஆம் ஆண்டு இரண்டு சூரிய கிரகணம் நிகழக இருக்கிறது. அவற்றில் முதல் சூரிய கிரகணம் இந்த ஏப்ரல் மாதம் இறுதியில் அதாவது ஏப்ரல் 30 தேதி நிகழக இருக்கிறது.

2022 சூரிய கிரகண தேதி மற்றும் நேரம்:

பஞ்சாங்கத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, இந்த கிரகணம் மதியம் 12.15 மணிக்கு தொடங்கி மாலை 04.07 மணி வரை இருக்கும். இந்த கிரகணம் மேஷ ராசியின் பரணி நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

இந்தியாவில் தெரியுமா?

2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழும் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாதாம்.

ஆனால் இந்த சூரிய கிரகணத்தை தென் மற்றும் மேற்கு-தெற்கு அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதிகளில் பார்க்க முடியும்.

இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணில் பார்த்து மகிழ்ந்தாலும், பாதுகாப்பு கண்ணாடிகள், பைனாகுலர், ப்ரொஜெக்டர் ஆகியவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

2022-ஆம் ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எத்தனை நிகழும் தெரியுமா?

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரிய கிரகணம் என்பது ஒரு அரிய வானியல் நிகழ்வு ஆகும். சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணங்களில் நான்கு வகைகள் உள்ளதாம்.

அவை மொத்த, வளைய, பகுதி மற்றும் கலப்பினம் ஆகும். இதில் ஒவ்வொன்றும் உலகின் ஒவ்வொரு பகுதிகளில் மட்டுமே தெரியும்.

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com