சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா.. சொகுசு கப்பலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Cordelia Cruises Price

சொகுசு கப்பல் சுற்றுலா..!

பிரண்ட்ஸ் பொதுவாக நாம் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு அனைவருமே விரும்புவோம். அதிலும் பலருக்கு கப்பலில் பயணம் செல்வதற்கு அதிகம் விருப்பம் இருக்கும். இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டில் எப்படி சொகுசாக கப்பலில் சுற்றுலா செல்ல முடியும் என்று நினைப்பீர்கள். இனி நம் தமிழ்நாட்டிலும் சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லலாம்.. அது எப்படி என்று தானே கேட்குறீர்கள். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4-ஆம் தேதி தொடங்கிவைத்துள்ளார். அந்த திட்டத்தை பற்றியும், இந்த சொகுசு கப்பலின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றியும், இவற்றில் பயணம் செல்வர்தற்கு எவ்வளவு கட்டணம் தொகை என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டம்:

Cordelia cruise

வெளிநாடுகளிலும் இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே இது போன்ற சொகுசு கப்பல் சுற்றுலா திட்டங்கள் இருக்கிற நிலையில், இப்போது நம்ம தமிழகத்திலேயே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் பெயர் கோர்டிலியா குரூஸ் (Cordelia cruise) ஆகும். இந்த கோர்டிலியா குரூஸ்சொகுசு கப்பலானது பார்ப்பதற்கு தண்ணீரில் மிதக்கம் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே ஏராளமான மக்கள் இந்த கப்பலில் சுற்றுலா செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.

சொகுசு கப்பல் சுற்றுலா கட்டணம் விவரம் – Cordelia Cruises Price:

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை வரும் 2 நாள் சுற்றுலா திட்டமும், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் திட்டமும் இந்த சொகுசு கப்பலில் இயக்கப்படவுள்ளன.

ஆகவே 2 நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 நபருக்கு ₹ 32,710 ரூபாய் முதல், அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் ஆகியவை அடங்கும்.

சிறப்பு அம்சங்கள்:

சுமார் 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்களை கொண்டுள்ளது.

ஒரே நேரத்தில் 1,950 பயணிகள் உட்பட 2,500 பேர் வரை இந்த சொகுசு கப்பலில் பயணிக்க முடியும்.

இதில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. இதுதவிர கலையரங்கம், 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம், உடற்பயிற்சி மையம், ஸ்பா, மசாஜ் நிலையம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

மேலும், கப்பலில் விருந்து கொண்டாட்டங்கள், திருமணங்கள், அலுவல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com