இனி 8 மணி நேரம் அல்ல வேலை 12 மணி நேரம் தான் வேலை..! சட்டம் என்ன சொல்கிறது வாங்க பார்க்கலாம்..!

Advertisement

12 Hours Working Rule in Tamil Nadu 

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு முக்கியமான செய்தி ஆகும். வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் உரையாடி அதன் மூலம் வேலை பார்ப்பவர்களுக்கு கிடைத்த நன்மை பற்றி பார்க்கலாம். கீழ் பதிவில் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

12 Hours Working Rule in Tamil Nadu:

கடந்த 2 வருடமாக மத்திய அரசே கொண்டுவர முடியாத இந்த சட்டம் தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. சட்டம் சொல்வது என்ன ? இது யாரை பாதிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். ஏப்ரல் 21, தேதி 2023 தொழிலாளர் நலத்துறை சட்ட முடிவு குறித்த செய்தி வெளியாகி உள்ளது.

குறிப்பு: ஏப்ரல் 24ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள்.

அதாவது தொழிலாளர் பாதுகாப்பு திருத்தச் சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டத்தின் மூலம் 8 மணி நேரம் பணி நேரத்தை உயர்த்தி 12 மணி நேரமாக உயர்த்தும். இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனை தொடர்ந்து இந்த சட்ட மசோதா தொடர்பாக, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் சி.வி. கணேசன் உள்ளிட்டோர், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளனர்.

புதிய சட்டம் சொல்வது என்ன..?

இதில் கொண்டு வந்துள்ளது என்னவென்றால் 12 மணி நேரம் என்பது கட்டாயம் அல்ல. 8 மணி நேரம் என்பது தான் கட்டாயம். 12 மணி நேரம் வேலை செய்யலாமா என்பது பணியாளர்கள் தான் முடி செய்யவேண்டும். தொழிலாளர் உடன் பட்டால் மட்டுமே அவர்களுக்கு 12 மணி நேரம் வேலை, அவர்களை கட்டாய படுத்த கூடாது. இதனை பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது நம்ம ஊரு ரேஷன் கடையா என்பது போல் ரேஷன் கடைகளில் மாற்றம் அனைத்து பொருட்களும் அங்கேயே கிடைக்கும்

இது யாருக்கு பொருந்தும்:

தினமும் 12 மணி நேரம் வேலை என வரும் போது வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஆகும். அதேபோல் அனைத்து நிறுவனத்திற்கும் இது பொருந்தாது. மின்னணு நிறுவனங்கள், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வரும்.

பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு 1 கோடி நபர்கள் தேர்வு  யார் தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement