கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு | Gas Cylinder Price Reduced News in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மகளிர் தினத்தையொட்டி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனை பற்றிய விவரங்களை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க. முந்தைய காலங்களில் எல்லாம், பெண்கள் சமையல் செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். விறகு அடுப்பில் சமைக்கும்போது, அடுப்பினை ஊதாங்குழல் கொண்டு ஊதுவார்கள். அவ்வாறு ஊதும்போது அதிலிருந்து வெளியேறும் புகை உடலிற்குள் புகுந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல், கண்களில் பட்டு கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கேஸ் சிலிண்டர் வந்ததிற்கு பிறகும் கூட, பல குடும்பங்களில் விறகு அடுப்பில் மட்டும் தான் சமைத்து வந்தார்கள். கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு போதிய அளவில் பணம் இல்லாதால் விறகு அடுப்பினை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதன் பிறகு, பிரதமர் மோடி அவர்கள் பெண்களின் நலன் கருதி இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம், அனைத்து குடும்பங்களும் இன்றளவும் பயனடைந்து வருகிறார்கள்.
Gas Cylinder Price Reduced Today in Tamil:
சிலிண்டர் விலை சமீபத்தில் 200 ரூபாய் குறைந்துள்ள நிலையில், தற்போது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண்களுக்கு பயனுள்ள வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில், சர்வதேச மகளிர் தினமான இன்று பெண்களின் நலன் கருதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில், பெண்கள் விறகு அடுப்பில் சமைத்து அவதிப்பட்டு வருவதை உணர்ந்த பிரதமர் மோடி அவர்கள், பெண்களுக்கு பயனுள்ள வகையில், இலவச கேஸ் சிலிண்டரை வழங்கினார். அதனை தொடர்ந்து, தற்போது, கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைந்துள்ளது என்ற நற்செய்தியையும் பொதுமக்களுக்கு கூறியுள்ளார். மேலும், தமிழகத் தாய்மார்கள், சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி இந்த அறிவிப்பினை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, பெண்கள் உட்பட பலரும் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |