அரசு பொதுமக்களுக்கு அறிவித்துள்ள குட் நியூஸ்..! இதில் உங்களுக்கு என்ன லாபம் தெரியுமா..?

Advertisement

Major Change in Land and House Registration Fees in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக வீடு நிலம் வாங்குவோருக்கு மிகவும் பயனுள்ள ஒரு செய்தியாக இருக்கும். அப்படி என்ன செய்தி என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன செய்தி என்றால் பத்திர பதிவு கட்டணத்தில் ஒரு சில மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது.

அது என்ன மாற்றம் அதனால் உங்களுக்கு என்ன பயன் போன்ற தகவலை இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றுவது எப்படி தெரியுமா

பத்திரப் பதிவு கட்டணம் குறைப்பு..? 

 நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 

அதாவது 09.06.2017 அன்று முதல் விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஆவணங்களுக்கான ஏற்பாடு பதிவுக் கட்டணம் 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதனை குறைக்க சொல்லி பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதனால் தற்போது அறிவித்துள்ள பட்ஜெட்டில் இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகியவற்றிற்கான ஆவணங்களுக்கு 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். 

மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஆவண ஏற்பாட்டிற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்” என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement