வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திடீரென பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..! வாகன ஓட்டிகளுக்கு இந்த விஷயம் இன்னும் தெரியாதா..!

Updated On: April 3, 2023 1:02 PM
Follow Us:
petrol diesel price kerala in tamil
---Advertisement---
Advertisement

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

இந்த நவீன காலத்தை பொறுத்தவரை அனைவரும் பெரும்பாலும் பைக், கார் இதுபோன்றவற்றையினை தான் உபயோகப்படுத்துகின்றனர். நம் முன்னோர்கள் காலத்தில் சைக்களினை தான் உபயோகப்படுத்தினார்கள். ஆனால் இப்போது சைக்கிள் என்றால் பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. அதுபோல தற்போது நாம் பயன்  பயன்படுத்தும் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இத்தகைய பெட்ரோல் டீசல் விலையானது நாளுக்கு நாள் வேறுபட்டு கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் இப்போது பெட்ரோல் மட்டும் டீசலின் விலை குறித்து கேரளா மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையின் அதிகரித்து உள்ளதா..! இல்லை குறைந்து உள்ளதா..! என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ சரமாரியாக குறைந்த கேஸ் சிலிண்டரின் விலை..  இன்னமும் உங்களுக்கு இந்த நியூஸ் தெரியாம இருக்கா.. 

பெட்ரோல் டீசல் விலை:

கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் இதனுடைய விலை ஏற்றம் மற்றும் இறக்கமாக காணப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான பட்ஜெட்டினை அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்தன. அந்த வகையில் கேரளா மாநிலமும் சிலவற்றையினை பட்ஜெட்டில் தாக்கல் செய்தன.

அதில் பெட்ரோல், டீசல் விலையும் இடம் பெற்று உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அதற்கான விலை அறிவிப்பும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இத்தகைய பட்ஜெட்டில் அறிவித்தது போல இப்போது பெட்ரோல் மற்றும் டீசலிக்கான விலை அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது கேரளா முழுவதும் இனி பெட்ரோல் விலை பெட்ரோல் 109 ரூபாய் 98 காசுகளுக்கும் மற்றும் டீசலின் விலை  98 ரூபாய் 52 காசுகளுக்கும் 1 லிட்டரின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. 

மேலும் இந்த அறிவிப்பானது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளா வாகன ஓட்டிகள் அனைவரும் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசலின் விலையினை ஒப்பிடும் போது இது அதிகமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்⇒அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! இந்த மாஸான நியூஸை தெரிஞ்சிக்கலனா எப்படி.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now