ரேஷன் கடையில் பணிபுரிபவர்களுக்கு இந்த நியூஸ் தெரியாதா..! அப்போ உடனே அந்த குட் நியூஸை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Advertisement

ரேஷன் கடை பணியாளர்கள்

ரேஷன் கடை என்பது மக்கள் அனைவருக்காகவும் வேண்டி ஒவ்வொரு ஊராட்சி அல்லது ஊரில் அமைக்கப்பட்டுள்ளதாகும். இதனை நியவில்லைக்கடை என்றும் கூறுவார்கள். இந்த ரேஷன் கடையில் மாதந்தோறும் தமிழக அரசு வழங்கியுள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் அது போன்ற எண்ணற்ற பொருட்கள் ரேஷன் கடை பணியாளரால் வழங்கப்படுகிறது. அதுபோல இது மட்டும் இல்லாமல் அரசு மக்களுக்காக அளிக்கும் ஊக்க தொகையினையும் சரியாக ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அந்தந்த குடும்பத்தினருக்கும் போய் சேர வேண்டிய பொறுப்பு ரேஷன் கடை பணியாளர்கள் உடையது. இத்தகைய ரேஷன் கடை பணியாளர் வேலை ஆனது அரசு வேலை ஆகும். இப்படிப்பட்ட ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. ஆகையால் ரேஷன் கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் அது என்ன குட் நியூஸ் என்று தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ ரயில் பயணிகள் கவனத்திற்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் அறிவிப்பு..! உடனே அந்த நியூஸை தெரிஞ்சுக்கிட்டு பயன்பெறுங்கள்.. 

ரேஷன் கடை பணியாளர் ஊதியம்:

தமிழகத்தை பொறுத்த வரை ரேஷன் கடை கார்டு வைத்து இருக்கும் ஒவ்வொரு நபரும் அதிமாக பயன் அடைகின்றனர். அதுபோல தமிழகத்தை பொறுத்தவரை தோராயமாக 35,000-ற்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளதாகவும் மற்றும் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளதாகவும் தோராயமாக கணக்கெடுப்பின்படி கூறப்படுகிறது.

இத்தகைய ரேஷன் கடை அனைத்தினையும் சரியாக இயங்க செய்யும் பொறுப்பு ரேஷன் கடை பணியாளரின் பொறுப்பு. இந்த வேலை அரசு வேலையாக இருந்தாலும் கூட இதற்கான ஆட்கள் குறைவாக தான் உள்ளனர்.

அதனால் மக்களுக்கு சரியான நேரத்தில் பணம் அல்லது பொருட்கள் சேர வேண்டும் என்று ஒரு பணியாளரே 2 அல்லது 3 ரேஷன் கடைகளை வெவ்வேறு நேரத்தில் திறந்து வேலை செய்து வருகின்றனர்.

ரேஷன் கடை பணியாளர்கள் குறைவாக இருப்பதால் வேலை நிறைய இருப்பதால் சம்பளம் உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. பணியாளர்களும் அதற்காக விடாமல் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஆகையால் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கியானது முடிவு செய்து அதற்காக அரசியிடம் கோரிக்கையும் வைத்ததது. அந்த கோரிக்கையினை அனுமதித்து ஒரு குட் நியூஸினை கூட்டுறவு வங்கியானது 1 ரேஷன் கார்டுக்கு 5 ரூபாய் என்ற கணக்கில் கூடுதல் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளது.

அதுபோல கூட்டுறவு வங்கியானது பதவி உயர்வு குறித்தும் கோரிக்கை வைத்ததன் விளைவாக உயர்நீதிமன்றத்தில் ரேஷன் கடையில் பணிபுரியும் நபர்களின் தகவலை கூட்டுறவு வங்கி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தகுதி வாய்ந்த விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் விரைவில் சேர்க்கப்படும் என்றும் ஆணை வந்துள்ளது.

மேலும் இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்று குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement