பெண் உங்கள் மீது உயிராக இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி.?
ஆண், பெண் நட்பு மற்றும் ஆண் மற்றும் ஆணின் நட்பு, பெண் மற்றும் பெண்ணின் நட்பு என்பது வெவ்வேறாக தான் இருக்கும். சில பேருடைய நட்பில் சண்டைகள் வரும், ஆனால் மறுநிமிடமே பேசி விடுவார்கள். சில பேருக்கு தன்னுடைய நண்பர் அல்லது தோழி மாற்றுவர்களிடம் நெருக்கமாக பழகினால் பிடிக்காது. அதுமட்டுமில்லாமல் சில பேருக்கு சந்தேகம் கூட வரும், அதாவது நம் மேல் உண்மையான அன்பு வச்சிருக்காங்களா என்று தோணும். அதனால் தான் இந்த பதிவில் ஒரு பெண் உங்களின் மேல் உயிராக இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
எல்லா விஷயத்தையும் ஷேர் செய்வாள்:
முதலாவதாக ஒரு பெண் உங்கள் மேல் உயிராக இருக்கிறார் என்றால் உங்களிடம் எல்லா விஷயத்தையும் அப்டேட் செய்வாள். அதாவது தினமும் நடக்க கூடிய எல்லா விஷயங்களையும் உங்களிடம் கூறுவாள். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்குவதற்கு வரைக்கும் நடக்க கூடிய எல்லா விஷயங்களையும் கூறுவாள். நீங்கள் அவள் சொல்லும் விஷயத்துக்கு ரெஸ்பான்ஸ் பண்ண வில்லை என்றாலும் அதனை கூறுவாள். எடுத்துக்காட்டாக நான் காலையில் ஊருக்கு போனேன், பெரியம்மா வீட்டில் தான் மதியம் சாப்பிட்டேன். இது போன்று நடக்கின்ற எல்லா விஷயத்தையும் கூறுவாள்.
ரிப்ளை செய்வாள்:
நீங்கள் சமூக வலைத்தளங்களில் என்ன ஸ்டேட்டஸ் போட்டாலும் சரி அதற்கு ரிப்ளை செய்வாள். உங்கள் மேல் உயிராக உள்ள பெண்கள் நீங்கள் என்ன உதவி என்று கேட்டால் இல்லையென்று சொல்லமால் உதவ கூடியவராக இருப்பார்கள்.
மகிழ்ச்சி:
உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக சின்ன பிள்ளை தனமான விஷயத்தை கூட செய்வார்கள்.
அழுகை:
நீங்கள் அவர்களை வெறுக்கிறீர்கள் அல்லது அவர்களுக்கான நேரம் ஒதுக்கவில்லை என்றாலும் சரி அழுது விடுவார்கள். அது எவ்வளவு மனவலிமையான பெண்ணாக இருந்தாலும் சரி அழுது விடுவாள்.
விலக மாட்டார்கள்:
நீங்கள் கவலையாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உங்களை விட்டு விலக மாட்டார்கள். உங்களுடன் அந்த நேரத்தை கழிப்பார்கள். நீங்களே அவர்களை போ என்று சொன்னால் கூட போக மாட்டார்கள்.
உங்களிடம் பேச வேண்டும் என்று அவருக்கு தோணும் அதற்காக உங்களுக்கு கால் பண்ணி பேச மாட்டார்கள், மாறாக கால் செய்து நீங்கள் அதனை எடுத்தவுடன் பிசியா இருக்கீங்களா என்று கேட்டிருப்பார்கள்.
மேல் கூறப்பட்டுள்ளவை பார்த்து என்ன பைத்தியக்கார தனம் என்று நினைக்காதீர்கள். ஒரு பெண் உயிராக இருக்கிறார் என்றால் இந்த விஷயங்களை செய்வாள். உங்களுக்கு இது போன்ற பெண் கிடைத்திருக்கின்றாள் என்றால் இந்த பதிவை ஒரு லைக் பண்ணுங்க..
இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Pothunalam.com |