வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மற்றவர்களுடன் பழகுவது எப்படி? சமூக திறன்களை மேம்படுத்துவது எப்படி?

Updated On: January 31, 2024 8:35 PM
Follow Us:
How to Improve Social Skills in Tamil
---Advertisement---
Advertisement

சமூக திறன்களை மேம்படுத்துவது எப்படி?How to Improve Social Skills in Tamil

பொதுவாக மற்றவர்களை ஈர்ப்பது என்பது ஒரு கலை. சிலருக்கு பொதுவாக எப்படி பழக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் சிலருக்கு மற்றவர்களிடம் எப்படி பழக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இதன் காரணமாக பல பிரச்சனைகள் அல்லது பல இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு பணிபுரியும் இடத்தில் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவருக்கு தெரியவில்லை ஏற்றல் அது அவர்களுடைய வேலைக்கே பிரச்சனை வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இது போன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடு, நண்பர்களிடத்தில் பகைமை, உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்காமல் போதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஆக மற்றவர்களிடம் எப்படி பழக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதற்கெல்லாம் உங்களிடம் Social Skill இல்லாதது தான் முக்கிய காரணம் ஆகும். ஆக அடிப்படையை உங்களிடம் இருக்க வேண்டிய 10 Social Skill பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.

Top 10 Simple Social Skills in Tamil

No: 1

ஒருவாறு உங்களிடம் அவருடைய போனில் உள்ள ஒரு புகை படத்தை காட்டுகிறார்கள் என்றால் அந்த புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு அவர்களிடம் அந்த செல்போனை கொடுத்துவிட வேண்டும் அது தான் ஒரு நாகரிகமான பழக்கம் ஆகும். அதற்கு மாறாக நீங்கள் அடுத்தடுத்த புகைப்படங்களை பார்க்க கூடாது. இதனால் உங்கள் மீது அவர்களுக்கு குறைவான மதிப்பு வர ஆரம்பித்துவிடும்.

No: 2

ஒருவருக்கு போனில் கால் செய்கிறீர்கள் என்றால் தொடர்ச்சியாக இரண்டு முறைக்கு மேல் அவர்களுக்கு கால் செய்ய கூடாது. இரண்டு முறைக்கு மேல் நீங்கள் ஒருவருக்கு கால் செய்து அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால். அதன் பிறகு கால் செய்ய வேண்டும். ஏன் என்றால் அவர்கள் முக்கியமான வேலையில் இருந்திருக்கலாம். ஆக அவர்களுக்கு நீங்கள் தொடர்ச்சியாக கால் செய்து கொண்டே இருக்கும் போது அவருக்கு கோவம் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.

No: 3

நீங்கள் உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களோடமோ அல்லது யாராவது தெரிந்தவர்களிடம் இருந்து ஏதோ ஒரு தேவைக்காக சிறிய அளவில் பணம் வாங்கிருந்தீர்கள் என்றால். அந்த தொகையை அவர்கள் கேட்பதற்குள் நீங்கள் கொடுத்துவிடவும். இது தான் ஒரு நல்ல மனிதனுக்கு உள்ள ஒரு நல்ல குணம் ஆகும். இதற்கு மாறாக அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் படி வைத்துக்கொள்ளாதீர்கள் இதனால் அவர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

No: 4

நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே நம்மை போன்றே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறான விஷயம் ஆகும். ஏன் என்றால் நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஆக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை விட்டுவிட்டு நீ என்ன மாதிரி தான் இருக்கணும் உன்னுடைய விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று யாரையும் நாம் கட்டாயப்படுத்த கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களை பற்றிய சுவாரசியமான தகவல்

No: 5

உங்கள் நண்பர் உங்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்று விருந்து வைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆக நீங்கள் இது தான் சாக்கு என்று அவர்களுக்கு அதிகள் செலவினை வைத்துவிட கூடாது. அந்த இடத்தில் நீங்கள் லிமிட் பாலோ செய்வது உங்களுக்கும் நல்லது, உங்களை அழைத்து சென்ற நண்பருக்கும் நல்லது. ஏன் என்றால் இதனால் உங்கள் நபர் உங்களை ஏன்டா ஹோட்டலுக்கு அழைத்து வந்தோம் என்று தவறாக நினைத்து விடலாம். ஆக அங்கு நீங்கள் லிமிட் பாலோ செய்வது மிகவும் நல்லது.

No: 6

பொது இடத்தில் ஒருவர் செய்த நல்ல விஷயத்தை பாராட்டினீர்கள் என்றால் அது உங்களுக்கு நல்ல மதிப்பை பெற்று தரும். அதுவே ஒருவரை பொது இடத்தில் மிகவும் கேவலமாக, பேசக்கூடாத வார்த்தைகளை சொல்லி பேசினால் அது உங்களுக்கு கெட்ட பெயரை கொண்டு வந்து சேர்த்துவிடும்.

No: 7

ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீங்கள் அவர்களிடம் என்ன சம்பாதிக்கிறீர்கள், உங்களுடைய வயது என்ன, என்பதையெல்லம் கேட்க கூடாது. அது அநாகரிகமான விஷயம் ஆகும். ஏன் என்றால் இந்த கேள்வி அவர்களுக்கு ஒரு வேளை எரிச்சலை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கலாம் ஆக. இது போன்ற விஷயங்கள் மற்றவர்களிடம் கேட்பதை முற்றிலும் தவிர்க்கவும். இது ஒரு நல்ல நடத்தியாகும்.

No: 8

ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய முகத்தி பார்த்து குறிப்பாக கண்களை பார்த்து பேச வேண்டும். அதுவே நீங்கள் வேறு எங்காவது பார்த்து பேசினால் அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படும். அதாவது அவர்கள் பேசுவதற்கு நீங்கள் மதிப்பு கொடுக்கவில்லை என்பது போல் அவர்களுக்கு எண்ணம் வரம்.

No: 9

ஒருவரை சாதரணமாக கலாய்ச்சி பேசும் போது அவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால், உடனே நீங்கள் அவர்களை கலாய்ப்பது ஸ்டாப் செய்துவிடுங்கள். ஏன் என்றால் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கலாம். இல்லை என்றால் நீங்கள் அவர்களை ரொம்ப கலாய்ச்சிருக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு பெண் உங்கள் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

No: 10

உங்களுக்கத்தான் நிறைய விஷயங்கள் தெரியும் என்று ஆணவமாக இருக்க கூடாது. ஏன் என்றால் உங்களுக்கு தெரிய சில விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆக இந்த உலகில் இருக்கும் அனைவருக்குமே எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவருக்கு என்னென்ன தேவையோ அதனை மட்டும் தெரிந்துகொண்டிருந்தால் போதும். எனவே நான் தான் எல்லாம் அறிந்தவன், நான் தான் உயர்ந்தவன் என்று ஆணவம் இருக்க கூடாது.

No: 11 

தேவை இல்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட கூடாது. கணவர் மனைவி இருவருக்குள் பிரச்சனை என்றால் அது அவர்கள் பேசி சரி செய்துகொள்வார்கள். தேவையில்லாமல் மூன்றாவது நபர் அவர்களுடைய பிரச்சனையில் தலையிட கூடாது.

No: 12

பொது இடத்தில் பேச வேண்டிய விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். குறிப்பாக நீங்கள் என்ன சாதி, என்ன இனம், என்ன மதம் என்ற கேள்விகளை கேட்கவே கூடாது. அதனை தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்ய போறீங்க. ஆக இந்த விஷயங்களை கேட்பதை முற்றிலும் தவிர்க்கவும்.

இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Pothunalam.com 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now