ஒருவர் பக்குவமடைந்தவர் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..

Advertisement

ஒருவர் பக்குவமடைந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்வது எப்படி.?

ஒவ்வொரு நபருக்கும் மற்றொரு நபருக்கு பெயர், உருவம் எப்படி வேறுபட்டிருக்கிறதோ அதே போல் குணமும் வேறுபட்டு இருக்கும். இந்த குணமானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். குணத்தினை வைத்து தான் அவர்களிடம் பழகுவோம். அதே போல இந்த நேரத்தில் இவருடைய குணம் இப்படி தான் இருக்கும் என்ற கணிப்பு இருக்கும்.

சில பேர் வயது ஆகிருக்கும் ஆனால் அவருடைய பேச்சு ஆனது குழந்தை தனமாய் இருக்கும், நாம் அவர்களை பார்த்து என்ன சின்னப்பிள்ளை தனமாய் பேசுகிறாய் என்று கேலி சொல்லுவோம். அது போல சில பேர் வயது குறைவாக இருந்தாலும் அவருடைய பேச்சு 60 வயது ஆனவர் பேசுவது போல இருக்கும்,. இவர்களை பார்த்தும் நாம் கிழவி போல் பேசுகிறாய் என்று கூறியிருப்போம். அதனால் இந்த பதிவில் ஒருவர் பக்குவமடைந்தவர் என்று தெரிந்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

குறை கூறாமல் இருப்பது:

ஒரு பக்குவமடைந்த நபர் மற்றவரிடம் உள்ள குறைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதனை அவரிடமேநீங்கள் இப்படி மாற்றி கொண்டால் நல்லா இருக்கும் என்று கூறுவார்கள்.

ஆச்சரியமான விஷயம்:

எந்த விதமான ஆச்சரியமான விஷயத்தை கூறினாலும் அதனை அமைதியாக கேட்டு கொள்வார்கள். அது போல மகிழ்ச்சியான விஷயத்தை கூறினாலும் அதனை வெளிக்காட்ட மாட்டார். தனக்குள் அந்த மகிழ்ச்சியை வைத்திருப்பார்.

மற்றவர்கள் பேசும் போது:

ஒரு இரண்டு நபர்கள் பேசி கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். இவர்கள் பேசும் விஷயத்தில் மூன்றாவது மனுஷன் அதாவது பக்குவமடைந்த நபர் வந்து அதனை குறுக்கிட மாட்டார்.

ஒரு பெண் உங்கள் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி

உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்:

இவரிடம் உள்ள உணர்வுகளை வெளிக்காட்ட மாட்டார்கள், அதாவது அவருக்கு கவலை, இன்பம் போன்றவை இருந்தாலும் அதனை முகத்தில் காட்ட மாட்டார்கள். இந்த உணர்வுகளை தனக்குள்ளேயே வைத்திருப்பார்கள்.

மாற்றத்தை ஏற்று கொள்வர்:

குடும்பம் அல்லது வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரி ஏதாவது மாற்றம் இருந்தால் என்னால் முடியாது, இதனை ஏற்று கொள்ள முடியாது என்று நினைக்க மாட்டார்கள். எந்த மாற்றமாக அதனை ஏற்று கொள்வார்கள்.

சோசியல் மீடியா:

சமூக வலைத்தளங்களில் இவர்களுடைய உணர்வுகளாய் வெளிப்படுத்த மாட்டார்கள். அதாவது கவலைய இருந்தால் அதற்கு ஒரு ஸ்டேட்டஸ் ஆகவும், சந்தோசமாக இருந்தால் அதற்கு ஒரு ஸ்டேட்டஸ் போட மாட்டார்கள்.

இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Pothunalam.com 

 

Advertisement