வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பொண்ணுங்க பத்தின இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு?

Updated On: February 20, 2026 5:30 PM
Follow Us:
Facts About Female Psychology in Tamil
---Advertisement---
Advertisement

 Facts About Female Psychology in Tamil

பெண்கள் நாட்டின் கண்கள் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட ஆன்றோர் வாக்கு ஆகும். பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர்.

பெண்களை பற்றி நிறைய விஷயங்கள் பெருமையாக சொல்லிக்கொண்டே செல்லலாம். சரி இங்கு பெண்கள் பற்றிய சுவாரசியமான உளவியல் உண்மைகள் சிலவற்றை இங்கு படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மனிதர்களை பற்றிய 5 உண்மைகள் சரியான்னு பாருங்க..

No: 1

இந்த உலகத்திலேயே 90 சதவீதம் பெண்களுக்கு மனதளவில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அந்த பிரச்சனையை யாரிடமும் வெளிப்படையாக சொல்லமாட்டார்களாம். தனக்குள்ளேயே அந்த பிரச்சனையை வைத்துக்கொள்வார்களாம். குறிப்பாக மிகவும் அமைதியாக இருப்பார்களாம்.

No: 2

ஒரு பெண் முதல் முதலாக ஒரு ஆணை பெறுகிறாள் என்றால் அவள் அந்த ஆணின் முகத்தையோ, ஹேர் ஸ்டைலயோ பார்க்க மாட்டலாம். அவர்கள் முதலில் எதை பார்ப்பாங்க எப்படின்னா அந்த ஆணின் கால்களை தான் பார்ப்பங்களாம்.

No: 3

ஒரு அழகான பெண்ணிடம் ஒருவர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னோம்னா, அவுங்க வெக்கபடுவார்களாம் இருந்தாலும் அவர்கள் மனதில் என்ன இருக்கும் அப்படினா, நாம் சுமாராக தான் இருக்கோமோ என்று தான் நினைப்பார்களாம். அதுவே ஒரு சுமாரான பெண்ணிடம் சென்று நீங்க அழகா இருக்கீங்க அப்படின்னு சொன்னோம்னா அவர்கள் தான் இந்த உலகில் அழகு என்று பெருமையாக நினைத்துக்கொள்வார்களாம். ஆக என்னைக்குமே ஒரு அழகான பெண் தான் அழகாக இருக்கேன் என்று ஒற்றுக்கொள்ள மாட்டார்களாம்.

No: 4 

மெச்சுடாக புத்திசாலியாக இருக்கும் பெண்கள் பொதுவாக என்றுமே சிங்குலாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்களாம். அதுமட்டும் இல்லாமல் மெச்சுடான பெண்களுக்கு ஒரு கனவு இருக்குமாம் அவர்களுடைய அந்த கனவு நிறைவேறுவதற்கு தங்களுடைய நேரத்தை செலவிடுவார்களாம்.

No: 5 

பெண்கள் தனக்கான உடையைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே, வாழ்நாளில் சுமார் ஒரு வருட காலத்தைச் செலவழிக்கின்றனர்.

No: 6

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தங்களது இரண்டு காதுகளால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்டு உள்வாங்கும் திறனும் பெண்களுக்கு உண்டு.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மற்றவர்களுடன் பழகுவது எப்படி? சமூக திறன்களை மேம்படுத்துவது எப்படி?

No: 7

ஆண்களை விட, குறைவாகவே பெண்கள் பொய் பேசுவார்கள். தான் பேசுவது பொய் என்று பிறர் கண்டுபிடிக்காதவண்ணம், உண்மைபோலவே பேசும் திறமை பெண்களிடம் உள்ளது. மேலும் மற்றவர்கள் பேசும் பொய்யை எளிதாக கண்டுபிடிக்கும் திறனும் அவர்களுக்கு உண்டு.

No: 8

பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள். வலியை தாங்கும் சக்தி ஆண்களை விட, பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

No: 9

சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட பெண்கள் அதிகமாக கவலைப்படுவார்கள். அதேசமயம் அவர்களால் கவலைகளில் இருந்து சீக்கிரமே மீண்டு வர இயலும். அதுமட்டுமல்லாமல் பிரச்சினைக்கானத் தீர்வையும் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.

No: 10

பெண்கள் அதிகமாக அழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. வருடத்திற்கு 30 முதல் 60 முறை பெண்கள் அழுகின்றனர்.

இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Pothunalam.com 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now