5 Psychology People Secret
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். இந்த குணங்களை பொறுத்து தான் மற்றவர்கள் பழகும் முறை இருக்கும். இந்த குணங்களில் அன்பு, கோபம், கவலை, மகிழ்ச்சி போன்றவை அடங்கும். வேலையில் இருக்கும் டென்சன் காரணமாக பலரும் கோபப்படுகிரார்கள். எதற்கு கோபப்படுகிறர்கள் என்று தெரியாமலையே கோபப்படுகிறோம். அதில் மனிதர்களின் மன தத்துவத்தை அவர்களின் நடக்கும் விதத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
அதிக நேரம் தூங்குவது:
சில பேருக்கு தூக்கமே வராது, சில பேர் அதிக நேரம் தூங்குவார்கள். அதிக நேரம் தூங்குபவர்களை பார்த்து நாம் என்னடா இப்படி தூங்கிறாய், எப்படி தான் உனக்கு தூக்கம் வருது என்று கேட்பார்கள். சில பேர் கவலை இல்லாத ஆள் அதனால் தான் தூக்கம் வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அதிகமாக தூங்குபவர்களின் வாழ்க்கையானது அவர்கள் நினைத்து போல இருக்காது. அதாவது மகிழ்ச்சியாக இல்லை. அதனால் தான் அவர்கள் அதிக நேரம் தூங்குகிறார்கள்.
கோபம்:
கோபம் என்பது மனிதர்களுக்கு இருக்க கூடிய குணங்களில் ஒன்றாக இருக்கிறது, ஆனால் அவை சில பேருக்கு அதிகமாக வரும், சில பேருக்கு கோபம் என்பதே ஏற்படாது. சில பேர் சாதரண விஷயத்துக்கு எல்லாம் கோபம் வர கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நாம் ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு ஏன் இப்படி கோபப்படுகிறாய் என்று கேட்போம். ஆனால் இப்படி சின்ன விஷயங்களுக்கு கோபப்பட கூடியவர்களுக்கு ஒரு அன்பு தேவைப்படும்.
ஒரு பெண் உங்கள் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி
வேகமாக நடப்பவர்கள்:
நீங்கள் வேகமாக நடப்பவராக இருந்தால் உங்களிடம் தைரியம் அதிகமாக காணப்படும். நீங்க மற்றும் உங்களின் நண்பர்கள் எப்படி நடக்கிறார்கள் என்று அறிந்து அவர்கள் தைரியமானவர்களா அல்லது தைரியம் இல்லாதவர்களா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நகத்தை கடிப்பவர்கள்:
உங்களின் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் நகத்தை கடித்து கொண்டே இருக்க கூடிய குணம் உடையவர்களாக இருப்பார்கள். இதனை பார்த்தால் நகத்தை கடிக்காதே என்று கூறுவார்கள். ஆனால் இப்படி நகம் கடிக்க கூடியவர்கள் பதற்றமாக இருப்பார்கள் அதனால் தான் நகத்தை கடிக்கிறார்கள்.
அழுகை:
மனிதர்களின் உணர்வில் அழுகையும் ஒன்றானது, இந்த அழுகை பலருக்கும் பல் சூழ்நிலைகளில் ஏற்படும். சில பேர் சாதாரண விஷயத்துக்கெல்லாம் மனம் தாங்காமல் அழுகுவார்கள். அவர்களை நாம் என்ன தொட்ட தொன்னூருக்கெல்லாம் அழுகிற என்று கேட்போம். ஆனால் இப்படி அழுகிறவர்கள் மனதில் மற்றவர்களுக்கு எந்த வித தீங்கும் நினைக்காமல் தூய்மையான குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Pothunalam.com |