Advertisement
தமிழ் ஒரு வரி பொன்மொழிகள் | Oru Vari Ponmozhigal
தமிழ் மொழி பேசும் அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் பொதுநலம்.காம்-யின் அன்பான வணக்கங்கள். பலருக்கு தத்துவம் சொல்வதிலும், அதனை கேட்டு அதன்படி நடந்து கொள்வதிலும் அதிக விருப்பம் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் ஒரு வரி தத்துவம் பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து பயன்படுங்கள் நண்பர்களே..
ஒரு வரி கவிதை:
- யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோ அவர்களே தோல்வி அடைந்தவர்கள்.
- உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமே உங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும்.
- மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன்.
- புத்திசாலித்தனமும், தன்மானமும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொண்டே இருக்கும்.
- பிறர் நலன் பேணுவதே சொர்க்கம். மற்றவர் வளர்ச்சி கண்டு மனம் புழுங்குவதே நரகம்.
- ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்துப் போகாமல் சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.
- படிப்பவன் கண்ணில் நீரை எதிர்பார்க்க முடியாது.
- இதய வங்கியில் அன்பைச் சேமியுங்கள். அதை எந்த திருடனாலும் களவாட முடியாது.
- நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்.
- காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
தமிழ் ஒரு வரி பொன்மொழிகள்
- வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே!
- இன்றைய ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன்.
- நீங்கள் நீங்களாக இருங்கள். முகமூடி அணியாதீர்கள்.
- சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர்.
- எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ. அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை.
- கஷ்டப்பட்டு உழையுங்கள். நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை.
- நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள்.
- வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு.
- ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன்.
- எங்கு கூச்சல் அதிகமாக இருக்கின்றதோ அங்கு உண்மையான அறிவு இருப்பதில்லை.
ஒரு வரி தத்துவம்:
- யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ அவரே கவுரவத்தை அறுவடை செய்கிறார்.
- புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு.
- நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது.
- நேரத்தை சரியாக பயன்படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது.
- ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது.
- உங்களை நீங்கள் அடக்கி ஆழ்வதே உண்மையான வலிமை.
- நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும்.
- அயராமல் உழைப்பவனே உண்மையான மேதை.
- நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.
- மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.
தமிழ் மொழி பற்றிய கவிதை |
இது போன்ற பல தத்துவங்கள் சார்ந்த பதிவுகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> | QUOTES IN TAMIL |
Advertisement