விவசாயம் கவிதை
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நாம் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் விவசாயம் பற்றிய கவிதைகளை பார்ப்போம். ஒவ்வொரு மண்ணின் மைந்தனுக்கு தேசப்பற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயத்தின் மீதான பண்பும் இருக்க வேண்டும். வாங்க நாம் விவசாயின் உணர்வை கவிதை நடையில் பார்க்கலாம்.
Agriculture Vivasayam Quotes in Tamil:
சினிமா பார்ப்பவர்கள் எல்லாம்
சினிமாவில் நடிக்க ஆசைப்படுவார்கள்..
ஆனால் சோறு சாப்பிடும் நாமெல்லாம்
விவசாயம் செய்ய ஆசைப்படுவதில்லை.
Vivasayam Kavithai in Tamil:
ஒருநாள் அரசனும் ஆண்டி ஆவான்,
வரும் நாள் உழவனும் அரசன் ஆவான்..
வீழ்வது நாமாக இருந்தாலும்
வெல்வது விவசாயமாக இருக்கட்டும்.!
விவசாயம் பற்றிய கவிதை:
காட்டில் வேலை செய்பவனை
கேவலமாகவும்.. கணினியில் வேலை
செய்பவனை கௌரவமாகவும்
நினைப்பவர்களுக்கு தெரியவில்லை..
“அரிசியை” இன்டெர்நெட்டில்
டவுன்லோட் செய்ய முடியாது என்று.!
விவசாயம் பற்றிய கவிதைகள்:
தகுதி பார்க்கும் மக்களே..
விவசாயிகளின் கால்பட்ட
அரிசியை தான் கழுவி உண்கிறீர்கள்
என்பதை மறந்து விட வேண்டாம்.
Agriculture Vivasayam Kavithai in Tamil:
போலியான மருத்துவர்..
போலியான பொறியாளர்..
என்று கேள்விப்பட்டிருப்போம்
ஆனால் எங்கேயும்
“போலியான விவசாயி” என்று
கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால்
விவசாயிகளுக்கு போலியாக
இருக்கவும் தெரியாது..
போலியாக நடிக்கவும் தெரியாது.
இயற்கை கவிதை |
மழை கவிதை |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |