பாரதிதாசன் கவிதை வரிகள் | Bharathidasan Kavithaigal

Bharathidasan Kavithaigal

பாரதிதாசன் கவிதைகள் | Bharathidasan Kavithaigal

பாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் அவர் தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார். பாரதிதாசன் அவரகள் தமிழ் இலக்கிய வார்த்தை மொழிகளின் சொந்தக்காரரான பாரதியார் மீது மீது கொண்ட ஈர்ப்பினால் அவரது பெயரினை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் அவர்கள் எழுதிய கவிதை வரிகளை சிலவற்றை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

பாரதிதாசன் கவிதை வரிகள்:

நேர்மையாக
வாழ்ந்தே சிறந்த தவம்..
தனிமையிலும், மற்றவர்
மத்தியலும்
நேர்மையைப்
பின்பற்றுங்கள்..

Bharathidasan Kavithaigal:

பிறரிடம் எதற்காகவும்
கையேந்தக் கூடாது..
பிறரிடம் கையேந்தி
வாழ்பவன் தன்னைத்
தானே விலைப்படுத்திக்
கொள்கிறான்..

பாரதிதாசன் கவிதைகள்:

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

Bharathidasan Kavithaigal:

நித்திரத்தில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு.
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

-பாவேந்தர் பாரதிதாசன்.

பாரதிதாசன் கவிதைகள்:

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்
பண்டைப் பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?
செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil