மங்கையராய் பிறப்பதற்கே கவிதை வரிகள்..!

Advertisement

Mangaiyarai Pirapatharku Kavithai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். Mangaiyarai Pirapatharku Kavithai பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.  பொதுவாக, பெண்மையை போற்றக்கூடிய கவிதை வரிகளில் “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற கவிதை பிரபலமான ஒன்றாக திகழ்கிறது. நம் அனைவருக்குமே, இந்த “மங்கையராய் பிறப்பதற்கே என்ற பாடலில் முதல் இரண்டு வரிகள் மட்டுமே தெரியும். அதற்கு அடுத்து இரண்டு கவிதை வரிகள் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதாவது, “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற முதல் வரி மட்டுமே தெரியும். அதற்கு அடுத்த வரிகள் பற்றி தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துக்கொள்ளும் விதமாக, இப்பதிவில் மங்கையராய் பிறப்பதற்கே என்ற பாடலின் முழு பாடல் வரிகளையும், அதற்கான விளக்கத்தையும் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

மங்கையராய் பிறப்பதற்கே பாடல் வரிகள்:

மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!

Mangaiyarai Pirapatharku Kavithai in Tamil

மங்கையராய் பிறப்பதற்கே கூறியவர்:

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற பாடலின் வழியே பெண்மையை போற்றி  பாடியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஆவர். இந்நாளில் பெண்களின் பெண்மையை “மங்கையராய் பிறப்பதற்கே” என்ற பாடலில் எடுத்துரைத்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களை வணங்கி நினைவு கூறுவோம்.

பெண்மையை போற்றும் திருக்குறள்

மங்கையராய் பிறப்பதற்கே பாடல் விளக்கம்:

மங்கையா ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!

உண்மை தான். மாதவம் = மா+தவம் = மாதவம். மா என்றால் பெரிய என்று பொருள்படும். அதாவது, பெரிய தவம் செய்து வரம் பெற்று வந்திருந்தால் மட்டுமே மங்கையா ராகப் பிறக்க முடியும் என்பதே இதன் பொருள்.

பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!

பெண்கள் கை பார்த்துதான் இந்த உலகில் அறங்கள் வளர்கின்றன.பெண் இல்லாவிட்டால் இந்த உலகில் அறம் எங்கே வளரப் போகிறது..?

உலகில் நடைபெறக் கூடிய அனைத்து செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே. இதனை உணர்த்தியே ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று வந்தது. ஆனால், தற்போது, இந்த கூற்றினை பலபேர் தவறாக புரிந்து வருகிறார்கள்.

பெண்மை அழகு கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement