வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உலக சுகாதார தினம் கவிதை

Updated On: April 4, 2025 3:49 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

உலக சுகாதார தினம் கவிதை

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதாரம் தினம் ஆனது ஏப்ரல் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர்களின் காலத்தில் காற்று மாசுபாடு அடையாமல் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியால் காற்று ஆனது மாசு அடைந்து கொண்டே வருகின்றது. மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இந்த அமைப்பு ஐக்கிய சபையின் ஒரு சார்பு நிறுவனம் ஆகும். 1948-ம் ஆண்டு முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலக சுகாதார தின கவிதைகளை தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க கவிதைகளை அறிந்து கொள்வோம் வாங்க..

World Health Day Quotes in Tamil Images Download

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல 
உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் செல்வத்தை பெற முடியும்
அனைவருக்கும் இனிய உலக சுகாதார தின வாழ்த்துக்கள் 

World Health Day quotes in tamil

World Health Day Quotes in Tamil:

தனிமனித சுத்தமதை தவறாமல் செய்திடு
மணியான தூய்மையால் மண்ணுலகை மாற்றிடு

வீட்டினது சுத்தமென வீதியை கூட்டிடு
நாட்டையே நலமாக்க நல்லதை விதைத்திடு

சுத்தமிலா இடந்தோறும் சுகாதாரம் பெருக்கிடு
பத்தில்லா சூழலாக்க பார்முழுதும் பாடுபடு

வீட்டுகொரு கழிப்பறை வேண்டுமென கட்டிடு
காட்டின்மர வளங்களை கண்டிப்பாய் காத்திடு

பசுமையின் போர்வையால் பாரினை மூடிடு
விசும்பின்நீர் துளியாலே வேளாண்மை செய்திடு

நெரிசலே இல்லாத நகரத்தை நிறுவிடு
வரிசையில் காத்திருப்பு வழக்கத்தை மாற்றிடு

நல்லதொரு குடிநீரை நலிந்தோர்க்கும் கொடுத்திடு
இல்லாமை இல்லாமல் ஏழ்மையை ஒழித்திடு

சுற்றுப்புற தூய்மையை சுகமாக்கி வைத்திடு
பெற்றிடும் விழிப்பாலே பிணிகளை தடுத்திடு

மருத்துவ முழுமையால் மக்களை காத்திடு
ஒருவனுக்கு ஒருத்தியென உறவாலே வாழ்ந்திடு

ஊட்டங்கள் நிறைவான உணவையே உண்டிடு
வாட்டத்தை விலக்கிட விளையாட்டைக் கொண்டிடு

பன்பாடு மாறாத பாதையில் சென்றிடு
முன்னோர்கள் காட்டிய முறைமையை காத்திடு

இயற்கை உறவோடு இசைவாக வாழ்ந்திடு
உயரும் சுகத்தாலே உலகையே மாற்றிடு

World Health Day Quotes in Tamil Images:

அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்துக்கள் 

World health day quotes in tamil images

World Health Day Kavithai in Tamil:

சுகாதாரம் நம் செல்வம்,
சுகமான வாழ்வு நம் பலம்.
அறிவோம் நம் உடல் நலம்,
அவசரத்தில் மறக்காமல்!

தூய்மை என்பது முதற்சிக்கரம்,
தூய மனம், தூய உடலே நலம்.
நீரும், உணவும், காற்றும் தூய்மை,
நாளை நம்மை காக்கும் சுகம்.

வழக்கமான உடற்பயிற்சி,
வாழ்விற்கு தரும் புத்துணர்ச்சி.
மனச்சோர்வு நீங்கிட வேண்டும்,
மகிழ்ச்சியே மருந்தாக வேண்டும்!

நோயின்றி வாழ ஒரு தீர்வு,
நம் பழக்க வழக்கங்கள் தான் ஏது!
உலகம் ஒட்டுமொத்தமாகக் கருதுவோம்,
உறுதியாய் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்!

World Health Day Kavithai in Tamil

https://www.pothunalam.com/wp-content/uploads/2024/04/World-Health-Day-Kavithai-in-Tamil.jpg

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now