1,999 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்..! இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

Fire-Boltt Dawn Review in Tamil

பொதுவாக கடிகாரம் என்பது நேரத்தை அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக கைக்கடிகாரம் என்பது நமக்கு மிகவும் பயன்படுகிறது.  அப்படிப்பட்ட கைக்கடிகாரத்தில் பல வகையான மாற்றங்களும் புதுமைகளும் ஏற்பட்டுள்ளன. அப்படி ஏற்பட்ட பல வகையான மாற்றங்கள் மற்றும் புதுமைகளின் காரணத்தால் ஸ்மார்ட் வாட்ச் உருவாகியது. இன்றைய சூழலில் அனைவரிடமும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் இந்த ஸ்மார்ட் வாட்ச் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் மார்க்கெட்டில் எந்த ஒரு புது ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆனாலும் அதனை வாங்கி விட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். ஆனால் மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் வாட்ச்சை வாங்குவதற்கு முன்னால் அதனை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் 1,999 ரூபாய்க்கு கிடைக்கும் Fire-Boltt Dawn ஸ்மார்ட் வாட்ச் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து Fire-Boltt Dawn ஸ்மார்ட் வாட்ச் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fire-Boltt Dawn Details in Tamil:

Fire-Boltt Dawn Details in Tamil

இந்த Fire-Boltt Dawn ஸ்மார்ட் வாட்ச் 13 பிப்ரவரி 2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை 1,999 ரூபாய் ஆகும்.

முக்கிய அம்சங்கள்:

  • 1.47 இன்ச் செவ்வகக் காட்சி
  • ஸ்மார்ட் அறிவிப்புகள்
  • இசை கட்டுப்பாடு
  • 7 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2,000 ரூபாயில் வெயிலுக்கு இதமாக குளுகுளுன்னு தண்ணீரை தெளிக்கும் டேபிள் ஃபேன் பற்றி உங்களுக்கு தெரியுமா

சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட் வாட்சில் பல விளையாட்டு முறைகள், நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டர், SpO2, தூக்க கண்காணிப்பு, படி கவுண்டர், கலோரி எண்ணிக்கை, தண்ணீர் பானம் நினைவூட்டல், உட்கார்ந்த நினைவூட்டல், அழுத்த அளவீடு, மாதவிடாய் சுழற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி எண்ணிக்கை போன்ற பல சிறப்பம்சங்களை தனக்குள் கொண்டுள்ளது.

மேலும் இதில் கேமரா கட்டுப்பாடு, ஃபோன் இசைக் கட்டுப்பாடு, ஸ்மார்ட் அறிவிப்பு, டிஎன்டி, கால்குலேட்டர், அலாரம், ஸ்டாப் வாட்ச், வானிலை புதுப்பிப்பு, ஃபிளாஷ் லைட், ஃபைண்ட் மை ஃபோன், ஃபைண்ட் மை வாட்ச் மற்றும் டைமர் போன்ற வசதிகளும் உள்ளது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரு Screen இல்லங்க 2 Screen உள்ள லேப்டாப் பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement