Lenovo Yoga Book 9i Laptop Review in Tamil
இன்றைய நவீன கால கட்டத்தில் அனைத்து இடங்களிலும் கணினியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதே போல் அதனுடையது குழந்தையான மடிக்கணினின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. அதாவது இன்றைய கால கட்டத்தில் அனைவருமே கணினியை விட மடிக்கணினியின் மீது தான் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் அனைவருமே மடிக்கணியை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
அதே போல் சந்தையில் அடுத்து என்ன மடிக்கணினி வருகிறது என்பதை அறிந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் புதிதாக அறிமுகமாகவுள்ள Lenovo Yoga Book 9i மடிக்கணினி பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Lenovo Yoga Book 9i Release Date in India:
Lenovo நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அதன் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய லேப்டாப் மாடலை இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதன் விலை 1,72,990 ரூபாய் என நிர்ணயிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
Lenovo Yoga Book 9i Laptop Details in Tamil:
இந்தியாவில் ப்ரீமியம் லேப்டாப் செக்மென்ட்டில் 2 in 1 மாடலில் Lenovo நிறுவனம் புதிய 4K OLED Display கொண்ட லேப்டாப் ஒன்று அறிமுகம் செய்ய உள்ளது. இதனுடன் நமக்கு Lenovo Precision Pen 2 கிடைக்கிறது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> புதிதாக மொபைல் போன் வாங்க போறிங்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
சிறப்பம்சம்கள்:
இந்த மடிக்கணினியில் 4K (3840×2400 Pixels)/2.8K (2880×1800 Pixels) OLED 60HZ டச் Screen வசதி உள்ளது. இதில் கூடுதலாக Display HDR TrueBlack 500, Dolby Vison மற்றும் 400 Night Brightness அளவு உள்ளது.
மேலும் இந்த மடிக்கணினியில் 16GB RAM மற்றும் 1 TB Storage வசதி உள்ளது. மேலும் இந்த மடிக்கணினியில் Intel நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான 13th Gen Intel Core i7- 1360P Processor, Iris XE Graphics மற்றும் 12 Cores (4 Performance + 8 Efficient)/16 Threads ஆகியவை இடம் பெற்றுள்ளது.
2MP FHD+IR Hybrid Camera வசதி உள்ளது. இதனுடன் பாதுகாப்பிற்காக Privacy Shutter வசதியும் உள்ளது. மேலும் இதில் 75WH பேட்டரி வசதி உள்ளதால் தொடர்ந்து நாம் 10 மணி நேரம் இதனை பயன்படுத்தலாம்.
இதன் எடை 1.4 கிலோ இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த லேப்டாப் மாடலில் Gen 2 Headphone Jack , 4 Speaker, Dolby Atmos Support, Glass TouchPad, WiFi 6E, Bluetooth 5.2, 5.0GHZ P Core மற்றும் 3.7GHZ E Core போன்ற பல வசதியும் உள்ளது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஸ்மார்ட் டிவி வாங்கனுமா அதுவும் குறைந்த விலையில் வாங்கனுமா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |