Air Hostess Salary in Tamil Nadu
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இவ்வுலகில் வாழும் அனைவருக்குமே இருக்க கூடிய மிகப்பெரிய ஆசை என்றால் அது அதிக சம்பளத்தில் ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான். அதற்காக தான் இங்கு பலரும் போராடி கொண்டு வருகிறார்கள். சரி பொதுவாக பெண்கள் அனைவருக்குமே விமான பணிப்பெண்ணாக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால், இப்பதிவின் வாயிலாக நாம் விமானத்தில் பணிப்பெண்ணாக (Air Hostess Salary) பணிபுரிபவர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.
தமிழ்நாட்டில் ஜூனியர் செயலக உதவியாளர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..
விமான பணிப்பெண்ணுக்கு மாத சம்பளம் எவ்வளவு – Air Hostess Salary:
Air Hostess என்பது பெண்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த பணிகளில் ஒன்றாக இருக்கிறது. காரணம் இந்த வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவார்கள். அதுமட்டுமில்லாமல், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும். இந்த காரணத்திற்காக தான் பெண்கள் பலரும் இந்த வேலையை விரும்புகிறார்கள்.
மேலும் பல பெண்கள் இந்த Air Hostess வேலைக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சியும் பெற்று வருகிறார்கள். அதிலும் சிலருக்கு இந்த Air Hostess வேலைக்கு சேர அதிக கல்வி தகுதி இருக்க வேண்டுமா என்ற கேள்வி இருக்கும். ஆனால் இந்த Air Hostess வேலையில் சேர, ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பட்டம் பெற்ற பிறகு விமான பணிப்பெண் வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். மேலும், பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் Quess Corp ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..
அதுமட்டுமில்லாமல், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி சரளமாகப் பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதை தவிர, ஒன்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு மொழிகள் தெரிந்தால், அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றே சொல்லலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், Air Hostess ஆக நினைக்கும் ஒரு பெண் 5.5 அடி உயரம் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் 5.5 அடி உயரம் இருந்தால், அவரது உடல் எடை 55 முதல் 60 கிலோ வரை இருக்க வேண்டும்.
சரி இதுவரை Air Hostess வேலைக்கு சேர என்னென்ன தகுதி வேண்டும் என்று பார்த்தோம். இப்போது நம் இந்தியாவில் Air Hostess ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!
Air Hostess Salary:
இந்தியாவில் Air Hostess ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் தோராயமாக ரூ. 40,671 முதல் ரூ. 2,09,273 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் விமானப் பணிப்பெண்களின் சராசரி சம்பளம் தோராயமாக ரூ.1,16,000 ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வங்கியில் Specialist Officer ஆக பணிபுரிபவருக்கு சம்பளம் இவ்வளவா..
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |