இந்திய வங்கியில் Specialist Officer ஆக பணிபுரிபவருக்கு சம்பளம் இவ்வளவா..?

Advertisement

Indian Bank So Salary in Tamil 

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் இந்தியன் வங்கியில் பணிபுரியும் Specialist Officer -க்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். தற்போது இந்தியன் வங்கியானது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior Manager, Assistant Manager, Chief Manager, SO போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் நாம் இன்று SO ஆக அதாவது Specialist Officer ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். எனவே இந்த பதிவை முழுமையாக படித்து Specialist Officer -ன் சம்பளத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்தியன் வங்கி தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் நபர்களுக்கு உதவும் வகையில் Indian Bank So Syllabus பற்றி கூறியுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

இந்தியன் வங்கி SO பாடத்திட்டம் 2024 | Indian Bank SO Syllabus 2024..

Indian Bank Specialist Officer Salary in Tamil:

இந்தியன் வங்கியானது இந்தியா முழுவதும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 146 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அப்படி இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள பணிகளில் ஓன்று தான் இந்த Specialist Officer பணியும். மேலும் பலரும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் இந்த Specialist Officer பணிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் என்று தேடி கொண்டிருப்பார்கள். அப்படி தேடிக்கொண்டிருபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Indian Bank SO Eligibility 2024:

இந்தியன் வங்கி அறிவித்திருக்கும் வேலைவாய்ப்பிற்கு B.E, B.Tech, Diploma, CA, B.Sc, MCA, PG Diploma மற்றும் PG Degree முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கல்வி தகுதியானது ஒவ்வொரு பணியை பொறுத்து மாறும்.

எனவே விண்ணப்பதாரர்கள் அதன் அதிகாரப்பூர்வ www.indianbank.in
இணையதளத்தை பார்வையிடவும்.

Diploma முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு | உடனே Apply பண்ணுங்க..

Indian Bank So Salary 2024 in Tamil: 

இந்திய வங்கியில் Specialist Officer ஆக பணிபுரியும் நபர்களுக்கு மாத சம்பளம் தோராயமாக ரூ. 36,000 முதல் 89,890/- ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் இது சில அளவுகளை பொறுத்து மாறும். அதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் பார்க்கலாம்.

Indian Bank SO Salary 2024
Post Pay Scale
Scale I ₹36,000-1490(7)-46,430-1740(2)-49,910-1990(7)-63,840
Scale II ₹48,170-1740(1)-49,910-1990(10)-69,810
Scale III ₹63,840-1990(5)-73,790-2220(2)-78,230
Scale IV ₹76,010-2220(4)-84,890-2500(2)-89,890
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement