AEPS Scam in Tamil | AEPS மோசடிகள்
இதுலகூட மோசடி நடக்குதான்னு யோசிக்கிறமாதிரி எல்லாத்துலயும் வர வர மோசடிகளுக்கு பஞ்சம் இல்லாம போய்ட்டு இருக்கு. முன்னெல்லாம் OTP நம்பர் சொல்லாதீங்க, account நம்பர் சொல்லாதீங்கனு, சொல்லிட்டு இருந்தது போய் இப்போலாம் கை ரேகை கூட பாத்துவைங்கனு சொல்லவேண்டியதா இருக்கு. ஏனா இப்போலாம் இதுல கூட மோசடி நடக்குது தெரியுமா. நீங்க நெனைப்பீங்க கை ரேகை வச்சி எப்புடி நம்மளோட பணத்த எடுக்கமுடியும்னு, சாதாரணமா நம்மளோட கை ரேகைய சிம் கார்டு வாங்குவதுக்கும் இல்ல ஆதார் சமந்தமா ஏதும் செய்றதுக்கு தான் உபயோகிப்போம். இப்போ அதுல கூட மோசடி நடக்குதாம்.
இந்த ஆதார் மோசடி எதன் அடிப்படையில் நடக்குதுனா AEPS அதாவது Aadhaar Enabled Payment System, AEPS என்பது ஆதார் மூலம் செயல்படுத்தப்பட்ட ஒரு கட்டண அமைப்பாகும், இது பணத்தை மாற்றவும், பில்களை செலுத்தவும், பணத்தை டெபாசிட் செய்யவும், திரும்பப் பெறவும், உங்கள் வங்கி இருப்பைச் சரிபார்க்கவும் மற்றும் பலவற்றையும் அனுமதிக்கிறது. இப்போ புரியுதா எப்படி இந்த AEPS Scam in Tamil நடக்குதுன்னு.
உங்களுக்கு வரும் மெசேஜ்களை போலியான மெசேஜ் என கண்டுபிடிப்பது எப்படி.?
What to do to avoid Aadhaar fraud
இதுபோன்ற Aadhar Scam0ல சிக்காம இருக்க நீங்க கீழே உள்ள methods-அ follow பண்ணுங்க.
- முதலில் Playstore-ல My Aadhaar or mAadhaar என்ற App-அ இன்ஸ்டால் பண்ணுங்க.
- உங்களோட ஆதார் டீடெயில்ஸ் கொடுத்து உள்ள போங்க.
- அதுல Biometric option-க்கு போங்க.
- அந்த option-ல Biometric Lock option யூஸ் பன்னிடுங்க.
அப்படி நீங்க பண்ணீங்கனா இந்த AEPS மோசடிகலில் இருந்து தப்பிச்சிடுவீங்க. உங்களுக்கு எப்போலாம் இந்த கைரேகை சேவை தேவைப்படுகிறதோ அப்போல்லாம் இந்த lock எடுத்துவிட்டுட்டு யூஸ் பண்ணிக்கலாம்.
நாம் பேசும் கால்களில் கூட மோசடி நடக்கிறதா?
ஆதார் மோசடிகளில் சிக்காமல் இருக்க சில வழிகள்
- தனிப்பட்ட கணினிகள் அல்லாத உங்கள் ஆதார் அட்டையின் நகல்களை அகற்றவும்.
- நீங்கள் சேமித்து வைத்திருக்கும் எந்த டிஜிட்டல் பிரதிகளிலும் கவனமாக இருக்கவும்.
- நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண் உங்கள் ஆதார் தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- UIDAI இணையதளத்தில் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதன் மூலம் உங்கள் ஆதார் எண் எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியலாம்.
Housing Loan-ல் நடக்கும் மோசடி பற்றி தெரியுமா உங்களுக்கு?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 | Link |