டெலிவரி பாய் otp கேட்டா சொல்லாதீங்க..

Advertisement

Delivery OTP  Scam

இன்றைய நவீன உலகம் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நமது வாழ்க்கையிலும் பலவகையான மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அனைவருமே போன் பயன்படுத்துகின்றோம். இந்த போன் மூலமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது முதல் பணத்தை ஆன்லைனில் செலுத்துவது முதல் அனைத்தையும் இதன் மூலமாகவே செய்கின்றோம். இதில் பயன்படுத்துவதில் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் செய்தித்தாள் மற்றும் செய்திகள் போன்றவற்றில் மோசடிகளை கேட்டு கொண்டு வருகின்றோம். இதனால் நீங்கள் ஏதன் மூலமாக மோசடிகள் நடக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் டெலிவரி OTP ஸ்கேம் பற்றி அறிந்து கொள்வோம்.

டெலிவரி ஸ்கேம்:

டெலிவரி ஸ்கேம்

இன்றைய காலத்தில் ஆன்லைன் மூலமாகவே தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து வாங்கி கொள்கிறார்கள். மோசடி செய்பவர்கள் அடிக்கடி டெலிவரி பேக்கேஜ்களைப் பெறும் வாடிக்கையாளர்களைக் கவனிக்கிறார்கள். பிறகு அவர்களிடம்  OTP-யைக் கேட்பதற்காக வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் டெலிவரி ஏஜெண்டுகளாக மாறுவேடமிட்டு வருகின்றனர். மேலும், டெலிவரியில் பணம் என்று கூறி ஆர்டர் தொகையை கேட்கின்றனர். வாடிக்கையாளர்கள் டெலிவரி பேக்கேஜைப் பெற மறுத்தால், டெலிவரியை ரத்து செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். ஆர்டரை ரத்து செய்வதற்கு உங்களுக்கு ஒரு OTP வரும் அதனை கூறுங்கள் என்று சொல்கிறார்கள். நீங்களும் OTP யை கூறுகிறீர்கள், இதன் மூலம் உங்களின் போன் மற்றும் UPI, ஆதார், பேன் கார்டு போன்றவற்றை ஹேக் செய்கிறார்கள்.

Online Product-ல உள்ள Rating-லாம் உண்மையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது தெரியுமா

போலி OTP மோசடியைத் தடுப்பது எப்படி.?

முதலில் நீங்கள் யார் OTP கேட்டாலும் அதனை பகிர கூடாது.

உங்களிடம் டெலிவரி பாய் என்று கூறி OTP கேட்டால் அவரை நீங்கள் ஆராய வேண்டும். அதாவது அவர் உண்மையிலே டெலிவரி பாய என்று ஆராய வேண்டும்.

ஒருவேளை நீங்கள் உங்களுக்கு வந்த ஆர்டர் என்று கூறினால் நீங்கள் ஆர்டர் செய்தியிருக்கிறீர்களா என்பது உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link 
Advertisement