ATM-யில் ஸ்கேம் ஜாக்கிரதை..

Advertisement

ATM Skimming Scam

இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் என்பது வளர்ந்து கொண்டேஇருக்கிறது. இதனால் நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது. அதனால் இதனை பாதுகாப்பாக கையாளுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. முன்னடியெல்லாம் பணத்தை எடுக்க வேண்டுமென்றால் வங்கிற்கு சென்று பணத்தை எடுப்போம், ஆனால் இப்பொது எல்லாம் ATM-யில் பணத்தை எடுத்து கொள்ளலாம். எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அந்த அளவிற்கு மோசடிகளும் நடந்து கொண்டே இருக்கிறது.

ATM Machine Scam:

இன்றைய காலத்தில் யாரும் பணத்தை எடுப்பதற்கு வங்கிக்கு செல்வதில்லை. ஏனென்றால் டெபிட் கார்டு உள்ளது. இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்து கொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருந்தாலும் அதில் மோசடிகளும் இருந்து கொண்டே இருக்கிறது. அதில் ATM-யில் நடக்கும் மோசடிகளை அறிந்து கொள்வோம்  வாங்க..

பொதுவாக எல்லா ஏடிஎம் மெஷின்களும் ஒரே மாதிரியாக தான் இருக்கும், அதில் எது Dupilgate ஆக பொருத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிவது கடினமான ஒன்று தான். எனவே எதுவும் தவறாக இருப்பதைக் கவனிப்பது மிகவும் கடினம். ஆனால் கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் சாதனத்தின் புகைப்படங்களை ஆராய்வதன் மூலமும், பல்வேறு ஸ்கிம்மிங் முறைகளைப் பற்றி உங்களைப் பழக்கப்படுத்துவதன் மூலமும், ஸ்கிம்மிங் கருவிகளை அடையாளம் காண முடியும்.

ATM கார்டை பணத்தை எடுப்பதற்காக மெஷினில் கார்டை போடும் போது அதில் Duplicate attachment இருக்கும். அதில் நீங்கள் கார்டை swipe பண்ணியதும் உங்களுடைய கார்டு details முழுவதும் ஸ்டோர் ஆகிடும்.

ஏடிஎம் ஸ்கிம்மிங் திட்டங்களில் பயன்படுத்தப்படும் கேமராக்கள் மிகச் சிறியவை, மேலும் இயந்திரத்தின் மற்ற பகுதிகளுடன் கலப்பதற்கு வழக்கமாக வேறு விதமாக இருக்கும். ஆனால் கேமராக்கள் ஒரு விசித்திரமான ஒளியைக் கொடுக்கலாம் அல்லது அசாதாரண பிளாஸ்டிக் இணைப்பிற்குப் பின்னால் மறைக்கப்பட்டீர்களாம்.

அடுத்து நீங்கள் பின் செட் பண்ற Keyboard-கு மேல் ஒரு சின்ன கேமராவும் இருக்கும். இதனை மூலம் உங்களுடைய கார்டு Details மற்றும் பின் நம்பர்களை எடுத்து உங்களின் கணக்கில் பணத்தை எடுத்து விடுவார்கள்.

Online Product-ல உள்ள Rating-லாம் உண்மையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது தெரியுமா

அதனால் நீங்கள் ATM மெஷினில் பணத்தை எடுப்பதற்கு முன்னால் இந்த விஷயங்களை எல்லாம் கவனியுங்கள். அப்போது தான் மோசடிகளில் மாட்டி கொள்ளாமல் இருக்க முடியும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link 

 

Advertisement