Phone Number Scam in Tamil
இன்றைய நவீன உலகம் நாளுக்கு நாள் அதீத வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நமது வாழ்க்கையிலும் பலவகையான மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அனைவருமே போன் பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் போனில் நாம் அதனை சரியாக பயன்படுத்துவதற்கு அதற்கான சிம் கார்டு மற்றும் போன் நம்பர் இருக்கும். இந்த போன் நம்பர் இல்லையென்றால் நாம் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
அதேபோல் இந்த போன் நம்பர் இல்லையென்றால் நமது போனே மதிப்பில்லாத ஒரு பொருளாக மாறிவிடும். இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான போன் நம்பரை வைத்து பலவகையான மோசடிகள் செய்யப்படுகிறது. அது என்ன மோசடி அப்படி செய்வதால் என்னென்ன பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Phone Number பகிர்ந்தால் என்ன நடக்கும்:
பொதுவாக ஒரு நபரின் தொலைபேசி எண் என்பது மிக மிக முக்கியமான ஒரு தகவல் பரிமாற்ற கருவியாகும். அதிலும் இது தான் போன் சரியாக இயங்குவதற்கு உதவுகிறது. மேலும் இந்த தொலைபேசி எண்ணை நாம் அனைத்து ஆவணங்கள் மற்ற அனைத்து அதிகார பூர்வ இடங்களிலும் பகிர்ந்து வைத்திருப்போம்.
அப்படிப்பட்ட மிக மிக முக்கியமான தொலைபேசி எண்ணை வைத்து பலவகையான மோசடிகள் இன்றைய சுழலில் நடைபெறுகிறது. அதனால் நாம் அனைவருமே நமது தொலைபேசி எண்ணை எந்த ஒரு தெரியாத நபர்களிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.
Online Product-ல உள்ள Rating-லாம் உண்மையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது தெரியுமா
அதையும் மீறி நாம் நமக்கு மிக மிக நெருக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது ஏதாவது ஒரு அலுவலகத்திலோ, தனிப்பட்ட நபரிடம் நமது தொலைபேசி எண்ணை பகிர்ந்து அவர் அதனை நமது அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பகிர்வது அல்லது வேறு ஏதும் தவறான முறையில் பயன்படுத்தினால் அது குற்றம் ஆகும்.
அப்படி அவர் நமது தொலைபேசி எண்ணை பகிர்ந்தால் நமக்கு ஏதாவது தவறான கால்ஸ் அல்லது மெசேஜ் வந்து கொண்டே இருந்தது என்றால் Information technology Act Section 72 A-ன் படி சம்மந்தப்பட்ட நபரின் மீது நாம் வழக்கு தொடுக்கலாம்.
அதன் அந்த நபருக்கு 3 வருடங்கள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக கிடைக்கலாம்.
Gas Cylinder Pipe Line-க்கு கூட Expiry Date இருக்கா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 | Link |