வாட்சப்பில் இப்படி கூட மோசடி செய்வார்களா.!

Advertisement

whatsapp scam 

இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் அதிகமாக பயன்படுத்த கூடிய வலைத்தளமான வாட்சப் உள்ளது. இதனை பில்லியன் கணக்கான பேர் பயன்படுத்துகிறார்கள். இதனை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதால் மோசடிக்காரர்கள் நம்மை குறி வைத்து தாக்குகிறார்கள். எந்தவிதமான மோசடிகளிலும் சிக்கி கொள்ளாமல் இருப்பது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

லிங்கை கிளிக் செய்யாதீர்கள்:

லிங்கை கிளிக் செய்யாதீர்கள்

பெரும்பாலான மோசடிக்காரர்கள் வங்கி அல்லது அரசு சார்ந்த நிறுவனமாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அதன் மூலம் மெசேஜ் செய்கிறார்கள். இந்த ம்மெசஜ்களில் லிங்கை அனுப்பி அதன் மூலமாக மோசடி செய்கிறார்கள். அதனால் வாட்ஸப்பில் வரும் எந்த லிங்கையும் டச் செய்யாதீர்கள்.

புதிய நம்பர்:

 

புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டு நபராலிருந்து மெசேஜ் வந்தால் அதனை அதற்கு ரிப்பிளை செய்யாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் அதற்கு பத்தி கூறுங்கள், அதுவே தெரியாதவர்கள் என்றால் அந்த மெசேஜை நீட்டித்து கொள்ளாதீர்கள்.

விவரம்:

whatsapp money scam

உங்களை பற்றிய விவரத்தை வாட்சப்பில் ஷேர் செய்யாதீர்கள், ஆதார், வங்கி புத்தகம், கிரெடிட் கார்டு போன்றவை பற்றி எந்த தகவலையும் வாட்சப் மூலமாக ஷேர் செய்யாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமாக மோசடிக்காரர்கள் உங்களுடைய விவரத்தை பயன்படுத்தி பணத்தை திருடுவதற்காக வாய்ப்புகள் இருக்கிறது.

உங்களுக்கு வரும் மெசேஜ்களை போலியான மெசேஜ் என கண்டுபிடிப்பது எப்படி.?

பரிசு:

வாட்சப்பில் மட்டுமில்லை  நீங்கள் பயன்படுத்தும் எந்த வலைத்தளங்களிலும் நீங்கள் 1 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. 10 லட்சம் வென்றுள்ளீர்கள் என்று மெசஜை அனுப்பி அதன் மூலமாக உங்களை வர வைப்பீர்கள். இப்படி பண தொகையை அதிகமாக அனுப்பினால் நீங்களும் ஆசைப்பட்டு அந்த மெசஜை ஓபன் செய்வீர்கள். அதன் பிறகு உங்களிடம் பிராசசிங் கட்டணம் என்று வாங்கி கொண்டு அவர்கள் மறைந்து விடுவார்கள்.

பாதுகாப்பாக வைத்து கொள்ள: 

வாட்சப்பை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு 2 Factor Authentication ENBLE செய்து கொள்ள வேண்டும். இதை ஆன் செய்வதன் மூலம் உங்களுடைய வாட்சப் கணக்கானது பாதுகாப்பாக இருக்கும். மேலும் வாட்சப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தும், நீங்கள் சந்தேகம் படும்படி இருந்தால் புகார் கொடுங்கள். அதாவது உங்களுடைய வாட்சப் கணக்கில் இருக்கும் ரிப்போர்ட் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி புகார் கொடுங்கள். ஒருவேளை நீங்கள் பணத்தை பறிகொடுத்து விட்டால் போலீசாரிடம் புகார் கொடுங்கள். போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள்.

நாம் பேசும் கால்களில் கூட மோசடி நடக்கிறதா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link 
Advertisement