How to Check Fake Messages
இன்றைய கால கட்டத்தில் மோசடிக்காரர்கள் நம்மை பல முறைகளில் தாக்குகின்றனர். அதில் ஒன்று நநம்க்கு மெசேஜ்களை அனுப்ப நம்மை ஏமாற வைக்கிறார்கள். உலகமானது கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. மோசடிக்காரர்களும் மெயில், வாட்சப், கால், மெசேஜ் போன்றவற்றில் தன்னுடைய கைவரிசையை காட்டுகின்றனர். இதில் நமக்கு வரும் மெசேஜ்கள் போலியான மெசேஜ்கள் என்று அறிந்து கொள்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
போலியான மெசேஜ் கண்டுபிடிப்பது எப்படி.?
உங்களுக்கு வரும் மெசேஜ்களை போலியான மெசேஜ்களை நீங்கள்அடையாளம் கண்டால் தான் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். அதனால் உங்களுக்கு வரும் மெசேஜ்கள் போலியான மெசேஜ்கள் என கண்டறிய சில வழிகளை பற்றி அறிந்து கொள்வோம்.
⇒ உங்களுஜ் வரும் மெசேஜ் ஆனது வங்கியில் இருந்து வருவது போல அனுப்புவார்கள். நீங்களும் உடனே வங்கியிலிருந்து வருகின்றது என்று நம்பிவிடுவீர்கள். நீங்கள் இதில் பார்க்க வேண்டியது எந்த நம்பரிலிருந்து மெசேஜ் வருகின்றது என்று கவனிக்கவும். ஏனென்றால் வங்கியில் வரும் மெசேஜ் ஆனது நம்பராக வராது. வங்கியிலிருந்து வரும் மெசேஜ் ஆனது வங்கியின் பெயர் போட்டு தான் வரும். அதனால் தனிப்பட்ட நம்பராக இருந்தால் அதனை நம்பாதீர்கள்.
⇒ அடுத்து உங்களுக்கு வரும் மெசேஜ்களில் பிழைகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், ஏனென்றால் வங்கிகள் மூலம் வரும் மெசேஜ் ஆனது பிழைகள் இருக்காது. மோசடிக்காரர்கள் அணுவும் மெசேஜ்களில் பிழை இருக்கும் என்பதால் அதனை நம்ப வேண்டாம்.
G-PAY , PhonePe-ல் இப்படியும் ஏமாத்துவாங்களா ? உஷாரா இருங்க மக்களே.!
⇒ முக்கியமாக உங்களுக்கு வரும் மெசேஜ்களில் பரிசு கிடைத்துள்ளது என்று வந்தால் அதனை நம்பாதீர்கள், ஏனென்றால் வங்கிகள் ஆனது இலவசமாக பரிசை கொடுக்க மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். அது போல உங்களிடம் வரும் மெசேஜ்களில் ஏதும் லிங்க் இருந்தால் அதனை டச் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட விபரங்கள் திருடப்படும்.
⇒ உங்களுக்கு சம்மந்தம் இல்லாத மெசேஜ்கள் வந்தாலும் அதனை நம்பாதீர்கள், அதாவது நீங்கள் போட்டியில் கலந்து கொண்டீர்கள், இதன் மூலம் வெற்றி அடைந்திருக்கிறீர்கள் என்று வந்தால் அதனை நம்பாதீர்கள்.
⇒ ஒரு சாதாரண தொலைபேசி எண் 10 இலக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் மோசடி செய்பவர்களின் நம்பர் ஆனது 11 இலக்கங்களை கொண்டிருந்தால் அவற்றை நம்ப வேண்டாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 | Link |