வாட்ஸப்பில இந்த செட்டிங்ஸ்யை மாத்திடுங்க

Advertisement

Whatsapp Group Settings 

நம் முன்னோர்களின் காலத்தில் போன் என்பது ஊருக்கு ஒரு டெலிபோன் வசதி இருந்தது. பணக்காரர் வீட்டில் செல் போன் வைத்திருந்தார்கள். இன்றைய காலத்தில் வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள்.

இந்த ஸ்மார்ட்போனில் முதலில் பயன்படுத்திய சமூக வலைத்தளமாக பயன்படுத்தியது வாட்ஸப் தான். இந்த வாட்சப்பில் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் வசதி போன்றவை இருக்கிறது. மேலும் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் பல விதமான அப்டேட்டுகளை வழங்குகிறார்கள். இந்த பதிவில் வாட்சப்பில் மாற்ற கூடிய செட்டிங்ஸ் வசதியை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Whatsapp Group Settings Privacy

வாட்ஸப்பில் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் நிறைய வகையான அப்டேட்டுகள் வந்தாலும் நாம் அதனை பாதுகாப்பாக கையாள வேண்டும். இந்த பதிவில் வாட்ஸப்பில் மாற்ற கூடிய செட்டிங்ஸ்யை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

வாட்ஸப்பில் பயன்படுத்துபவர்கள் அனைவரும் பல குரூப்களில் இருப்பீர்கள். இந்த குரூப் ஆனது உங்களுடைய காண்டாக்ட்டில்  இருப்பவர்கள் சேர்க்கும் படி வைக்கலாம், இல்லை யார் வேண்டுமானாலும் குரூப்பில் சேர்க்கும் படி வைக்கலாம். நீங்கள் யார் வேண்டுமானாலும் குரூப்பில் Add செய்யும் படி வைத்தால் பாதுகாப்பு அற்றதாக இருக்கும்.

நீங்கள் யார் வேண்டுமானாலும் குரூப்பில் Add செய்யும் படி இருந்தால் யாரோ ஒருவர் உங்களை குரூப்பில் Add செய்கிறார். அதன் பிறகு உங்களுக்கு நிறைய லிங்க்களை ஷேர் செய்வார்கள் . இதனை நீங்கள் கிளிக் செய்யும் போது உங்களுடைய கணக்கு திருடப்படும். இதனை தடுப்பதற்கு கீழே உள்ள செட்டிங்ஸ் படி ஆனில் வைத்து கொள்ளுங்கள்.

Whatsapp Group Settings

  • முதலில் வாட்ஸப்பிற்கு சென்று Settings-கு செல்ல வேண்டும்.
  • பின் அதில் இரண்டாவதாக இருக்கும் Privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு அதில் Groups என்பதில் My Contacts என்பதை enable செய்து வைத்து கொள்ளுங்கள்.
  • இதன் மூலம் உங்களுடைய காண்டக்ட்டில் யார் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும் தான் உங்களை குரூப்பில் Add செய்ய முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link

 

Advertisement