G-PAY , PhonePe-ல் இப்படியும் ஏமாத்துவாங்களா ? உஷாரா இருங்க மக்களே.!

Advertisement

UPI Scams

இன்றைய கால கட்டத்தில் UPI பயன்படுத்தாதவர்கள் என்று யாருமில்லை. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் UPI பயன்படுத்துகிறார்கள். காரணம் வேலைகளை ஈசியாக முடிப்பதற்கு உதவுகிறது, மேலும் எங்கே சென்றாலும் பணத்தை எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. மொபைல் இருந்து, அதில் ஏதவாது ஒரு UPI ஆப்பை பயன்படுத்தினால் மட்டும் போதும்.

சின்ன பெட்டி கடை முதல் ஹோட்டல் வரை UPI பயன்படுத்துகிறார்கள். இதில் நாம் பயன்படுத்தினால் மட்டும் போதாது, அதில் நாம் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும். அதிகமாக நாம் காதில் கேட்பது பண மோசடி, இவை நமக்கு நேரடியாகவும் சரி, மறைமுகமாகவும் சரி நிறைய வகையான பாதிப்புகள் நடக்கிறது. அதில் நாம் இந்த பதிவில் UPI ஸ்கேம் பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

UPI scam: 

நாம் போனை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது நமக்கு நார்மல் மெசேஜ் வரும். அதுமட்டுமில்லாமல் சில மெசேஜ்கள் லிங்க் ஆகவும் வரும். இதில் நாம் அனாவசியமான லிங்கை டச் பண்ண கூடாது. அடுத்ததாக போனில் யாரோ ஒருவர் உங்களுக்கு 2000 ரூபாய் பணம் செலுத்தி விடுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள், யாரு நமக்கு பணம் அனுப்பி உள்ளார்கள் என்பதற்குள் போன் வரும்.

நாம் பேசும் கால்களில் கூட மோசடி நடக்கிறதா?

உங்களுக்கு தெரியாமல் பணத்தை அனுப்பி விட்டேன் அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுங்க என்று கேட்பார்கள். நாமம் அய்யயோ பணத்தை தெரியாமல் அனுப்பி விட்டார்கள் என்று நினைத்து உங்களுக்கு திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறுவார்கள்.

தெரியாமல் பணம் அனுப்பியவர் என்ன சொல்லுவார் என்றால் அது என்னுடைய UPI நம்பர் இல்லை, அது என்னுடைய நண்பருடையது, நான் ஒரு மெசஜ் அனுப்புகிறேன் அந்த லிங்கை டச் பண்ணிங்க அப்படின்னா Google pay-குள் போகிவிடும்,

நாம் உடனே அந்த லிங்கை டச் பண்ணி பணத்தை செலுத்துவோம், இதில் என்னவென்றால் நீங்கள் இந்த லிங்கை டச் செய்ததும், உங்களுடைய Gpay-ஆனது ஸ்கேன் ஆகும். இதிலிருந்து உங்களிடம் இருக்கும் தொகை முழுவதும், எடுத்து விடுவார்கள். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களின் நண்பர்களுக்கும் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.

Hotel-ல தேவையில்லாம GST-கும் சேர்த்து காச கட்டாதீங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link 
Advertisement