Hotel-ல தேவையில்லாம GST-கும் சேர்த்து காச கட்டாதீங்க

Advertisement

Hotel-ல பில் கட்டறப்ப கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க!!

இப்போ தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்துவர மோசடிகளும் வளர்த்துக்கொண்டு தான் வருகிறது. நம்ம உபயோகிக்கும் பொருட்களிலிருந்து இருந்து நம்ம சாப்பிடும் சாப்பாடு வர ஏதோ ஒருவகைள நம்ம காசு போயிட்டுதான் இருக்கு. அப்படிப்பட்ட ஒரு மோசடி தான்நாம  Hotel-ல தேவையில்லாம GST-கும் சேர்த்து பணத்த கொடுத்துட்டு இருக்கோம். முக்காவாசி பேர் அந்த பில்-ல உள்ள GST-ய கவனிச்சிருக்கமாட்டாங்க ஏனா அது சின்ன அமௌண்ட்டா கூட இருக்கலாம் ஆனா போக போக இது பெரும் மோசடியா மாறும்.

இப்போதெல்லாம் இது ஹோட்டல் மட்டுமில்லாம பெரிய பெரிய கடை மற்றும் restaurant-ளையும் GST-யோட சேர்த்துதான் நமக்கு பில்  குடுக்குறாங்க. நாமளும் அத ஒரு தடவ கூட செக் பண்ணாம நம்ம பணத்த கட்டிடுவரோம். ஒருத்தவங்க கேள்விகேட்ட தான் அந்த எடத்துல எல்லாரும் கேள்விகேப்பாங்க. இதுக்காக கொண்டுவந்தது தான் Composition Taxpayer.

GST Composition Taxpayer என்றால் என்ன?

சிறு நிறுவனங்களுக்கு உதவவும், இணக்கத்தின் சுமையை குறைக்கவும் இந்திய அரசு ஜிஎஸ்டி கலவை கட்டமைப்பை (Composition Taxpayer) அறிமுகப்படுத்தியது. இந்த முன்முயற்சி, தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு சில இணக்கத் தேவைகளில் தளர்வுகளை அனுபவிக்கவும், அவற்றின் வருவாயின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் GST செலுத்தவும் அனுமதிக்கிறது.

சில கடைகள் அல்லது ஹோட்டல்கள் இந்த ஜிஎஸ்டி கலவை கட்டமைப்பை (Composition Taxpayer) கீழ் வந்தால் மக்கள் பில்லுடன் சேர்த்து GST கட்டவேண்டிய அவசியமில்லை. 

அச்சுறுத்தும் *401* தொலைபேசி அழைப்பு மோசடி

Restaurant GST Scam in Tamil | Hotel GST Scam in Tamil

இப்போ நீங்க ஒரு ஹோட்டலுக்கு போறீங்க சாப்பிட்டுமுடிச்சிட்டு பில் கட்ட போவீங்க அப்போ இவங்க கரெக்ட்டா தான் GST போட்ருக்காங்களானு ஒரு தடவ செக் பண்ணிக்கோங்க.

அது எப்புடிங்க நம்மளால செக் பன்ன முடியும்? இந்த GST செக் பன்ன ஒரு 5 நிமிஷம் கூட எடுத்துக்காது அது எப்புடின்னு கீழே பாக்கலாம் வாங்க.

How to Check Hotels Comes Under GST Composition Scheme

ஒரு கடையோ அல்லது ஹோடெல்லோ GST Composition Scheme-கு கீழ தான் செயல்பட்டு வருதுன்னு நம்மளால எப்படி கண்டுபிடிக்கமுடியம்.

  • First google-ல GST type பண்ணுங்க.

GST

  • அப்புறம் gst.gov.in என்ற தளத்துக்கு போங்க.
  • அதுல Search Taxpayer=> GSTIN/UIN of the Taxpayer என்ற optionகு போங்க.

  • அந்த ஹோடெல்லோட GST நம்பற அதுல போட்டு செக் பண்ணுங்க.
  • அப்படி செக் பண்றப்ப அந்த ஹோடெல் Composition Scheme-கு கீழ வந்திச்சின நீங்க GST pay பண்ணனும்னு அவசியம் இல்ல.

நீங்க நெஸ்ட் டைம் ஹோட்டலுக்கு போறப்ப இத ட்ரை பண்ணி பாருங்க.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement