*401* Call Forwarding Scam in Tamil!
நாளுக்குநாள் எது வளர்கிறதோ இல்லையா இந்த மோசடிகள் மட்டும் வளர்ந்துகொண்டே இருக்கின்றது. மோசடிகள் தொழில்நுட்பத்தைப் பெரிதும் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. அரசாங்கம் சைபர் கிரைம் பிரிவை நிறுவியும், சில குற்றங்களை அவர்களால் கண்டுபிடிக்கமுடிவதில்லை. இருப்பினும் காவல்துறை சில தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து புதிய மோசடி திட்டங்களைக் கண்டுபிடித்து வருகிறது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் அதனுடன் சேர்ந்து வளர்ந்து வருகின்றன. சமீபத்தில், செல்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அது என்னவென்றால் Call Forwarding அதாவது *401* தொலைபேசி மோசடி.
ஆன்லைனில் பயன்படுத்தவே கூடாத Passwords
*401* Call Forwarding மோசடி என்றால் என்ன?
ஒரு வகையான ஃபோன் மோசடியில் *401* அழைப்பு பகிர்தல் மோசடி பெரும் பங்குவகிக்கிறது, இது எப்படி உருவாகிறதுஎன்றால் ஒருவர் நம்முடைய ஃபோனை வாங்கி பேசிவிட்டு தருகிறேன் என்று சொல்லிவிட்டு *401* என்ற எண்ணிற்கு பிறகு தங்களுடைய மொபைல் நம்பரை type செய்து அழைத்தால் உங்களுக்கு வரும் முழு தகவல்களும் அந்த நபருக்கு சென்று விடும். எப்படிப்பட்ட தகவலென்றால் உங்களுடைய calls, OTP, Pincode, Bank Details மற்றும் சில முக்கியமான தகவல்கள்.
Hotel-ல தேவையில்லாம GST-கும் சேர்த்து காச கட்டாதீங்க=>
இந்த call forwarding scam மூலம் உங்களிடம் உள்ள தகல்வல்களையும் பெற்றுக்கொண்டு, உங்களுடைய bank account-ல் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
எப்படி நமது call forward ஆகியுள்ளது என்பதை கண்டுப்பிடிப்பது :
முதலில் நீங்கள் உங்கள் மொபைலில் *#21# என்ற எண்ணிற்கு call செய்து உங்களது ஃபோன் மோசடியில் சிக்கியுள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம்.
அப்படி உங்கள் ஃபோன் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் ##002# என்ற எண்ணிற்கு call செய்து அதை முடக்கிக்கொள்ளலாம்.
2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா?
எந்தெந்த வழியில் call forwarding scam நடக்கும்
- கஸ்டமர் சர்வீஸ்/ நெட்ஒர்க் ஆபரேட்டர்/ இணைய சேவை வழங்குபவர்.
- பேங்கில் இருந்து பேசுபவர் போல் நடிப்பர்.
- டெலிவரி செய்வது போல் நம்முடைய மொபைலில் இருந்து *401* உடன் அவருடைய நம்பரை இணைக்க சொல்வார்கள்.
இதுபோன்று பலவிதமாக *401* அழைப்பு பகிர்தல் மோசடி நடைபெற்று வருகின்றது. அதனால் அனைவரும் விழிப்போடு இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |