ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

Asia Cup 2022 Super 4 Ind vs Ban Today Match

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

Asia Cup 2022 Super 4 Ind vs Ban Today Match:- ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி A பிரிவில் நடைபெற்ற இரண்டு குரூப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதன்காரணமாக A பிரிவில் முதலிடம் பிடித்து இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

Asia Cup 2022 Super 4 Ind vs Ban Today Match:-

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத உள்ளனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும் என்று தெரிகிறது. எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும்.

துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉Sports
SHARE