ஆசிய கோப்பை பாகிஸ்தானை இந்தியா எத்தனை முறை வென்று உள்ளது தெரியுமா.?

india vs pakistan asia cup 2022 in tamil

ஆசிய கோப்பை இந்திய அணி

அனைவர்க்கும் அன்பு வணக்கம் இன்றைய பதிவில் கிரிக்கெட் ரசிக்கும் அனைவருக்கும் இந்த கேள்வியானது இருந்துவரும். அப்படி என்ன அது என்று யோசிப்பீர்கள்..? இந்த வருடம் ஆசிய கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. எத்தனை முறை ஆசிய கோப்பையை இந்தியா வென்று உள்ளது என்ற  கேள்வி அனைவருக்கும் எழுந்திருக்கும். அதேபோல் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இருவருக்கும் இடையே நடந்த போட்டிகளில் எத்தனை முறை இந்தியா பாகிஸ்தானை வென்றுள்ளது என்ற  கேள்விகள் அதிகளவு யோசித்துவருவீர்கள் அப்படி யோசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு நல்ல பதிலாக இருக்கும் வாங்க அதனை பற்றி முழு பதிவாக பார்ப்போம்.

ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த நடக்கும் இடம் நேரத்தை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து பாருங்கள் ⇒ ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2022 அட்டவணை

இந்தியா vs பாகிஸ்தான் விளையாடி எத்தனை முறை இந்தியா வென்றுள்ளது.

1984 முதல் 2018 வரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசியா கோப்பையில் 14 முறை மோதியுள்ளது. அதில் இந்தியா 8 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. பாகிஸ்தான் 5 முறை வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1984 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1988 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 1995 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 1995 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் முடிவு இல்லை.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 2000 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவை 44 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஆசிய கோப்பையை  வென்றது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 2004 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 2008 ஆம் ஆண்டு நடந்த போட்டியில்  8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 2010 ஆம் நடந்த போட்டியில்  பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில்  இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 2010 ஆம் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 2014 ஆம் ஆண்டு  நடந்த போட்டியில் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வென்றது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் 2016 ஆம் ஆண்டு  நடந்த போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாஆசிய கோப்பையை வென்றது. 

இந்தியாவும், பாகிஸ்தானும் 2018 ஆம் ஆண்டு  நடந்த போட்டியில் முதல் தடவை பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மறு தடவை பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉Sports