வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிஸம் குறைபாடு பற்றி தெரியுமா உங்களுக்கு ?

Updated On: November 29, 2023 12:36 PM
Follow Us:
autism spectrum disorder in tamil
---Advertisement---
Advertisement

ஆட்டிஸம் குறைபாடு

நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் நோய்கள் எதனால் தோன்றுகின்றது என்று நமக்கு தெரிவதுதில்லை. ஆனால் நமது உடலில் பல நோய்கள் தோன்றுகிறது. இன்றைய பரபரப்பான சூழலில் மக்களுக்கு உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் கூட பல நாட்களுக்கு பின்பு தான் தெரிகிறது. அந்த மாற்றத்தை தொடக்கத்திலே கண்டறிந்தால் அதனின் பாதிப்பும் நமக்கு குறைவாக இருக்கும் ஆனால் அதற்கான நேரம் தற்போதைய மக்களுக்கு இருப்பதில்லை. அப்படி குழந்தைகளில் ஏற்படும் சிறுமாற்றங்களை தொடக்கத்திலே கண்டறிந்தால் அதற்கான தீர்வும் எளிதாக இருக்கும். அந்தவகையில் இன்றைய குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிஸம் குறைபாடு பற்றியும் அதனை சரிசெய்வதற்கான மருத்துவ முறைகள் போன்றவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆட்டிஸம் குறைபாடு: 

autism spectrum disorder

ஆட்டிஸம் ஒரு நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். ஆட்டிஸம் என்பதனை  `ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’ (Autism Spectrum Disorder) என்று மருத்துவ மொழியில் அழைக்கின்றனர். ஆட்டிஸத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள், சமூகத்தில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன் (Communication), பழகும் திறன் (Socialization) போன்றவற்றில் பின்தங்கியிருப்பார்கள். ஆட்டிஸத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பேசும் திறன் குறைவாக இருக்கும். அவர்களின் மொழிகளை புரிந்துகொள்ளுவைது கடினம்.

ஆட்டிஸம் தன்மை:

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான தன்மை இருக்காது. ஒவ்வொரு குழந்தையையும் அதன் திறனை பொறுத்து பாதிப்பு மாறுபடும்.

ஐம்புலன்களுக்கான உணர்வு திறன்களும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. சில புலன்களின் திறன் அளவுக்கு அதிகமாகவும் சில புலன்களின் திறன் மிகவும் குறைவாகவும் காணப்படும்.

ஆட்டிஸம் அறிகுறிகள்:

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்து ஒரே மாதிரியான செயல்களை தொடர்ந்து ஈடுபடுவார்கள். அந்த செயலால் ஏற்படும் பாதிப்பு மற்றும் பயத்தை அவர்கள் அறிந்து இருக்கமாட்டார்கள்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காரணமின்றி அழுவது, சிரிப்பது, கைகளைத் தட்டுவது, குதிப்பதுபோல போன்ற சூழலுக்கு பொருந்தாத மன நிலையில் இருப்பது.

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ள சில குழந்தைகளுக்கு கற்றலில் சிரமம்ஏற்படும். மேலும் சிலருக்கு சாதாரண அறிவுத்திறனை விட குறைவான அறிவுத்திறன் இருக்கும்.

தங்கள் பார்ப்பதை மற்றவருக்கு சொல்ல முடியாமல் மற்றவரின் கைபிடித்து சென்று கட்டுவது. தனிமையை அதிகம் விரும்புவதும், காற்றாடி, ராட்டினம் போன்று சுழலும் பொருட்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துவது.

ஆட்டிஸம் காரணங்கள் :

ஆட்டிஸத்தால் ஒருவர் பாதிப்படைய காரணம் மரபணு மற்றும் சுற்றுசூழல் மாசு காரணமாக இருக்கலாம். ஆனால் ஆட்டிஸம் பதிப்பிற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆட்டிஸம் கண்டறியும் முறை:

autism

ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 10 மாதங்கள் முதல் கண்டறியலாம் அவர்களின் அறிகுறிகள் மூலம்.

ஆட்டிஸம் குறைபாட்டை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

ஆட்டிஸத்திற்கான பயிற்சி:

ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர் பயிற்சி மூலம் குணப்படுத்த முடியும்.

ஆட்டிஸத்தல் பாதிக்கப்படும் குழந்தைகளை சிறு வயது முதலே அவர்களின் தினசரி தேவைகளை தனியே செய்ய பயிற்சி அளிக்க வேண்டும்.

ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாதாரண மற்றும் உயர் புத்திசாலித்தனத்தைக் கொண்டு காணப்படுவார்கள். அவர்கள் விரைவாகக் கற்றுக்கொள்வார்கள். ஆனால் அன்றாட வாழ்வில் தங்களுக்குத் தெரிந்ததைத் தொடர்பு படுத்த அவர்களால் முடியாது. அதனால் அவர்கள் சிக்கலை சந்திப்பார்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now