எக்டோபிக் கர்ப்பம் என்றால் என்ன அதன் அறிகுறிகள்

Advertisement

Ectopic Pregnancy Symptoms in Tamil

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு தருணம். ஏனென்றால் திருமணம் முடிந்த பிறகு தான் ஒரு பெண்ணிற்கு அனைத்து விதமான பொறுப்புகளும் அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு இருக்கையில் திருமணம் ஆன சில நாட்களில் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி எதுவும் மகிழ்ச்சியான செய்து இருக்கிறதா என்று மறைமுகமாக கர்ப்பமாக இருப்பதை கேட்கும் ஒரு வழக்கம் ஆகும்.

திருமணம் ஆன பெண்களை பொறுத்தவரை கர்ப்பம் என்பது சில பெண்களுக்கு உடனே இருக்கும், மற்ற சில பெண்களுக்கு சில மாதம், வருடம் என நாட்கள் தள்ளி போகலாம், இப்படி இருக்கும் பட்சத்தில் சில பெண்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் போய் விடுகிறது. இதில் எக்டோபிக் கர்ப்பத்தை பற்றி பலரும் அறிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் எக்டோபிக் கர்ப்பம் அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்வோம்.

எக்டோபிக் கர்ப்பம் என்றால் என்ன.?

எக்டோபிக் கர்ப்பம் என்பதை குழாய் கர்ப்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கர்ப்பம் ஆனது கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரிப்பதை குறிக்கிறது. கரு முட்டையானது ஃப்லோபியன் குழாயிலயே தங்கி விடும். இந்த எக்ட்டோபிக் கர்ப்பம் ஆனது பல் பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது. இதனால் கவனிக்காமல் விட்டால் உயிருக்கே பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

45 நாள் கர்ப்பம் அறிகுறிகள்

எக்டோபிக் கர்ப்பம் காரணம்:

எக்டோபிக் கர்ப்பம் என்றால் என்ன

35 வயதிற்கு மேல் கருத்தரியும் பெண்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுகிறது.

ஏதவாது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அல்லது பலோப்பியன் குழாயில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுகிறது.

கருத்தடுப்பிற்காக மாத்திரை ஏதும் எடுத்து கொண்டவர்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

இடுப்பின் ஒரு பக்கத்தில் லேசான வலி அல்லது கடுமையான வலி ஏற்படும்.

இரத்தபோக்கு ஏற்படுதல், இவை சில நேரங்களில் அடர் நிறத்திலும், நீராகவும் வெளியேறினால் கவனிக்க வேண்டும்.

தோள்பட்டையில் வலி ஏற்படும்.

வயிற்று வலியுடன் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுதல்.

சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது மலம் கழிக்கும் போது வலி ஏற்படும்.

மயக்கம் ஏற்படும்.

உடல் பலவீனமாக இருத்தல்

உடலில் அதிகமாக வியர்க்க கூடும்.

எக்டோபிக் கர்ப்பம் அறிவது எப்படி.?

ஒரு எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிவதில் மருத்துவர் பரிசோதிப்பதில் அறிந்து கொள்ளலாம்.  உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனைகள் மற்றும் இமேஜிங் சோதனைகள்,  அல்ட்ராசவுண்ட் ) போன்ற பரிசோதனை எடுத்து கண்டுபிடிக்கலாம். இந்த பரிசோதனையில் கர்ப்பம் எந்த இடத்தில் உருவாகியிருக்கிறது என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

கண் அழுத்த நோய் அறிகுறிகள்

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement