Influenza Symptoms in Tamil
பொதுவாக நமது ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் வீட்டில் உள்ள டென்ஷன், வேலையில் உள்ள டென்சன் போன்றவற்றால் மன அழுத்தம் அதிகமாகின்றது. மன அழுத்தம் அதிகமானால் பிரஷர் பிரச்சனை வந்து விடுகிறது. இதனை சரி செய்வதற்கு மருத்துவரை நாடி செல்கின்றோம். சில பேர் நமக்கு பிரஷர் பிரச்சனை வந்திருக்கிறது என்று அறியாமலேயே சாதாரணமான மயக்கம் தான் அலட்சியம் செய்வார்கள். பிரஷர் அதிகமானால் இரத்த குழாய் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். அதனால் உங்கள் ஆரோக்கியத்தில் எதோ ஒரு பிரச்சனை ஏற்பட போகிறது என்றால் அதற்கு அறிகுறிகள் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் இன்புளுன்சா என்றால் என்ன அவற்றின் அறிகுறிகள் என்னவென்று அறிந்து கொள்வோம்.
இன்புளுன்சா என்றால் என்ன.?
புளு இன்புளுன்சா என்பது பெரும்பாலும் இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றால் ஏற்படும் நுரையீரலில் ஏற்படும் பிரச்சனையாக இருக்கிறது.
இந்த நோய் ஆனது எப்போ வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் இதனுடைய தாக்கம் இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் தான் அதிகமாக இருக்கும். இதனால் பருவகால காய்ச்சல் என்று அழைப்பார்கள்.
இந்த நோய் ஆனது மற்றவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் அதிலிருந்து பரவுகிறது. சளிக்காய்ச்சல் உள்ள ஒரு நபர் எந்த பொருளை தொட்டாலும் அதை மற்றவர் தொடும் போதும் இந்த நோய் பரவுகிறது.
புளு நோய் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- தலைவலி
- தசைவலி
- தொண்டைவலி
- உடல் பலவீனம்
- இருமல்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
புளு காய்ச்சல் யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்:
65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த காய்ச்சலானது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் நுரையீரல் பிரச்சனை, இருதயம், சிறுநீரகம் போன்றவற்றில் பிரச்சனை உள்ளவர்களுக்கு பிரச்சனையை அதிகப்படுத்தும்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள், புற்றுநோய் பிரச்சனை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய் ஆனது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
புளு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி.?
நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
வேறு யாருக்கும் காய்ச்சல் அல்லது புளு காய்ச்சல் இருந்தால் அவரை தொட்டு அணுக கூடாது. ஏனென்றால் இதன் மூலமாகவும் வைரஸ் பரவ கூடும்.
ஒவ்வொரு வருடமும் புளு காய்ச்சல் தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.
மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது எப்படி.?
நீங்கள் இருமும் போதும் சரி, தும்மும் போதும் சரி வாயில் கர்சீப் அல்லது டிஸ்ஸு வைத்து மூடி கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |