சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா.?

Advertisement

Kidney Cancer Symptoms in Tamil

பொதுவாக சிறுநீரக புற்று நோயானது பல வகைகளில் ஏற்படக்கூடும். சிறுநீரக புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 90-95% சிறுநீரக உயிரணுக்களில் ஏற்படும் புற்று நோயாகும். மேலும் இது சிறுநீர்ப்பை இழையங்களைப் பாதிக்கக்கூடிய ஒருவகைப் புற்று நோய் ஆகும். இது பெரும்பாலும் முதியவர்களை பாதிக்கிறது. ஆனாலும் பரம்பரை காரணிகளால் இளைஞர்களும் பாதிக்கப்பட கூடும். மேலும் இது புகையிலை பிடித்தல், மரபு வழி நோய்கள், முந்தைய கதிரியக்கச் சிகிச்சைகள், அடிக்கடி சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் உணவில் சேர்ந்து இருக்கக்கூடிய சில வேதியியல் பொருட்களால் இவ்வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இந்த புற்றுநோயின் நிலைகளை பொறுத்து அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அதாவது அறுவை சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை அல்லது நோயெதிர்ப்புச் சிகிச்சை போன்ற பல வழிகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.  இந்த நோய்க்கான அறிகுறிகளை அறிந்து கொண்டால் மட்டுமே நம்மையும் நம்மை சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதுகாக்க இயலும். அதனால் இந்த பதிவில் சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரக புற்றுநோய் அறிகுறிகள்:

Kidney Cancer Symptoms in Tamil

சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகளை நாம் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். இந்த நோயின் அறிகுறிகள் தெரிந்திருந்தால் மட்டுமே அதன் ஆரம்ப நிலையிலேயே தடுத்து ஒரு உயிரை காப்பாற்றலாம். சரி வாங்க அது என்னென்ன அறிகுறிகள் என்று பார்க்கலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

முதலாவது அறிகுறி சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல் இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று சிறுநீரக புற்றுநோய் ஆகும். எனவே இம்மாதிரி இரத்தம் கலந்த சிறுநீர் வந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

முதுகின் இரு புறங்களிலும் அல்லது அடிவயிற்று பகுதியில் வலி ஏற்படுதல்.

நாள்பட்ட சோர்வு அல்லது களைப்பு ஏற்படுதல்.

அதிகப்படியான எடை இழப்பு ஏற்படுதல் போன்றவை இந்த சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil

 

Advertisement