நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் | Symptoms Of Lung Failure in Tamil..!

Symptoms Of Lung Failure in Tamil..!

Symptoms Of Lung Failure

வணக்கம் நண்பர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகம் எப்படி இயங்கி கொண்டிருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படி நாம் வாழும் இந்த அவசர உலகத்தில் சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறார்கள். சாப்பிடுவதற்கே நேரம் இல்லை, இதில் நாம் எங்கிருந்து ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட போகிறோம்.

அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நூறு வயது வரை வாழ்ந்தார்கள். ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உண்டு பல நோய்களை வரவழைத்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவு முறை தான். அதுபோல எந்த நேரத்தில் என்ன நோய் வரும் என்று யாராலுமே சொல்ல முடியாது. அந்த வகையில் இன்று நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சிறுநீரகம் செயலிழந்து விட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் தெரியுமா

நுரையீரல் செயலிழப்பு அறிகுறிகள்:

நுரையீரல் செயலிழப்பு அறிகுறிகள்

நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் சுவாச உறுப்பாக செயல்படுவது நுரையீரல் தான். இதயத்தை போலவே நுரையீரலும் நமக்கு மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். அதனால் நாம் நுரையீரலின் பாதுகாப்பிற்காக சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதுபோல நுரையீரலில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது. அதாவது நுரையீரல் செயலிழந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

நுரையீரல் செயலிழப்பு என்பது நுரையீரல் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாதபோது இந்த பிரச்சனை உருவாகிறது. நுரையீரல் செயலிழப்பை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.

 • சுவாசிப்பதில் சிக்கல்
 • மூச்சு திணறல்
 • போதுமான காற்று கிடைக்காதது போன்ற உணர்வு
 • உடற்பயிற்சி செய்யும் திறன் குறைந்தது
 • நீங்காத இருமல்
 • இரத்தம் அல்லது சளி இருமல்
 • சுவாசிக்கும்போது வலி அல்லது அசௌகரியம்
 • மங்கலான பார்வை
 • குழப்பம்
 • தலைவலி
 • விரைவான சுவாசம்
 • சிரமப்படுவது

இதுபோன்ற அறிகுறிகளை வைத்து நுரையீரலில் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம். மேலும் இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil