முடக்கு வாதம் அறிகுறிகள்
நம் முன்னோர்களின் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதற்கு முன்பாகவே அறிகுறி தோன்றும். இந்த அறிகுறியானது ஒவ்வொரு பிரச்சனைக்கு ஏற்றாற்போல மாறுபடும். இந்த அறிகுறிகளை அறிந்து கொண்டாலே நோய்களை எளிதில் குணப்படுத்தலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் முடக்கு வாதம் அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
முடக்கு வாதம் என்றால் என்ன?
முடக்கு வாதம் ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோயாகும். இந்த நோயில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, எந்தவொரு பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்கும் உறுப்பு ஆனது, செயலிழந்து உடலில் உள்ள ஆரோக்கியமான திசுக்களை, குறிப்பாக மணிக்கட்டு, விரல்கள், முழங்கைகள் போன்ற உடலில் உள்ள மூட்டுகளைத் தாக்கத் தொடங்குகிறது.
முடக்கு வாதம் காரணங்கள்:
நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதன் மூலம் உடலை நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பாக வைத்து கொள்கிறது. இருந்தாலும் சில நேரங்களில் ஆன்டிபாடிகள் மூட்டுகளை உள்ளடக்கிய மெல்லிய அடுக்கைத் தாக்குகிறது. இந்த மெல்லிய அடுக்கு வீக்கமடைகிறது மற்றும் சுற்றியுள்ள எலும்புகள், குருத்தெலும்பு, தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை பாதிக்க செய்கிறது. இதனால் முடக்கு வாதம் ஏற்படுகிறது.
முடக்கு வாதத்தின் அறிகுறிகள்:
- மூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு
- காலையில் எழுந்தவுடன் மூட்டுகளில் விறைப்பு
- காய்ச்சல், சோர்வு மற்றும் பலவீனம்
- எடை இழப்பு
- தசை வலி மற்றும் வீக்கம்
- கை, கால் விரல்களில் வீக்கம் மற்றும் சிவத்தல்
முடக்கு வாதத்தை தடுப்பது எப்படி:
முடக்கு வாதத்தை தடுப்பதற்கு முக்கியமான வழிகள் என்னவென்றால் ஆரோக்கியமான வாழ்க்கையை முறையாக பின்பற்றுவதே இதற்கான வழியாக இருக்கிறது.
- தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொழுப்பு குறைந்த புரதங்களை அன்றாட உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.
- புகைபிடித்தல் முடக்கு வாதத்திற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால் இந்த பழக்கத்தை தவிர்த்து விட வேண்டும்.
- உடல் எடை அதிகமாக இருந்தால் முடக்கு வாத பிரச்சனையை ஏற்படுத்தும், அதனால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்தியிருங்கள்.
முடக்கு வாதத்திற்கான சிகிச்சை:
- முடக்கு வாதத்தின் நோயை கட்டுப்படுத்தவும், அறிகுறிகளை குறைக்கவும் பல சிகிச்சைகள் இருக்கிறது, அவற்றை பற்றி காண்போம்.
- வழியை தடுப்பதற்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது.
- மூட்டு வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு பிசியோதெரபி சிகிச்சை செய்யலாம்.
- கடுமையான சந்தர்ப்பங்களில், மூட்டுகளை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |