பிரசவம் அறிகுறிகள் – Labour Symptoms in Tamil
வணக்கம் மக்களே.. பிரசவம் குறித்த அறிகுறியை பற்றி தான் நாம் இன்றிய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். பெண்களின் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் நிகழ்வையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம். குழந்தை பிறப்பு என்பது அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். கர்ப்ப காலம் குழந்தை எப்போது பிறக்கும் என்று. நெருங்க நெருக்க கர்ப்பிணி பெண்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறி தெரிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்களுக்காக இங்கு குழந்தை பிறக்க போவதற்கான சில அறிகுறிகளை அறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா.?
பிரசவ அறிகுறிகள் – Pregnancy Delivery Symptoms in Tamil:
- கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறக்க போவதற்கான அறிகுறியாக பிறப்புறுப்பின் கீழ் அதிக எடையும் வயிற்றின் மேல் பகுதியில் லேசான எடையும் இருக்கும்.
- கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு வேளை குழந்தை பிறக்கப் போகிறது என்றால் சிறுநீர் கழிக்கும் போது மிகவும் அழுத்தமாக இருக்கும்.
- கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் அவர்களுக்கு சீக்கிரமாக குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தம்.
- புரோஸ்டாக்லாண்டின் என்ற சுரபியால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் இது குழந்தை பிறப்பதற்கு முன்பாக குடலை சுத்தம் செய்வதற்கான ஒரு வழி.
- முதுகு வலி கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் ஒரு சிலருக்கு பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளிவரும்.
- உங்கள் பிரசவ தேதி நெருக்கும் போது உங்கள் மலக்குடலில் உள்ள தசைகள் உட்பட உங்கள் உடல் தசைகள், கருப்பை தசைகள் பிரசவத்திற்கு தயாராகுவதற்கு பிரசவத்திற்கு முந்தைய வயிற்றுப்போக்கை நீங்கள் அனுபவிக்கலாம் இந்த அறிகுறி முற்றிலும் இயல்பானது. இது போன்று அறிகுறி வரும் போது உங்கள் மருத்துவரிடம் பரிந்துரைப்பது மிகவும் சிறந்து.
- கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக எடை அதிகரிப்பார்கள். இருப்பினும் உங்கள் கர்ப்பத்தின் முடிவில் எடை அதிகரிப்பு என்பது இருக்காது. காரணம் உங்கள் குழந்தை வயிற்றுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பார்கள். ஆக அவர்கள் வெளி வருவதற்கு தயாராகி கொண்டிருப்பார்கள். இதனால் கர்ப்பத்தின் இறுதி கால கட்டத்தில் குழந்தை வளர்ச்சி ஏற்பது இருக்காது இதனால் பெண்களுக்கு எடை அதிகரிக்க மாட்டார்கள்.
- சில பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பாடு, ஆனால் சில பெண்களுக்கு பிரசவ வலி என்பது ஏற்படாது இருந்தாலும் அம்னோடிக் திரவம் கசிவு அதாவது பனிக்குடம் நீர் கசிவு ஏற்படும். இந்த பனிக்குடம் நீரை ஒரே நேரத்தில் இழக்க மாட்டீர்கள், சில பெண்களுக்கு, பிரசவத்தின் ஆரம்பத்தில் ஒரு சொட்டு சொட்டாக வெளியேறும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2வது கர்ப்பம் அறிகுறிகள்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |